About Me

Tuesday, July 6, 2021

மனம் கொத்தும் பறவை...

Fly... 



காற்று வழி ஒரு கடிதம்..

மனம் விடும் தூது... 

சிநேகத்திற்குரிய பறவைக்கு... 


 தேடலில் திறக்கும் வானம்... 
சிறகுகள் விரிக்கும் மனம்... 
பெருவெளியில்
சிறகுகள் விரிய பறவையாகிறது 
மனம் தினம்!... 


பறவையே! 
கால் சுருக்கி சிறகு விரிப்பாய்... 
மனமோ 'கண்' சுருக்கி நினைவெனும் சிறகு விரிக்கும்! 

உனைக் கண்டோம் 
விமானம் படைத்தோம்.
 கற்க விரும்பிக்
 கரைகிறது மனம்... 
காணும் கண்கள் விரியும்! 

சிறகுகள் விரித்து 
காற்று வெளியில்  வாழ்வைச் சிறகால் எழுதிப் பறக்கிறாய். 
பறத்தலே உன் வாழ்வு!
பறத்தலின் வழி எல்லாம் தெளிகிறாய். 
தெளிந்த வழி பறக்கிறாய்!


றவை
            உன்னிடம் பாடம் பயில...

 கற்றுத் தெளிய ஏராளம் உண்டு.

 இரை சுமந்து  பறக்கிறாய்.
அறிந்தோ, அறியாமலோ 
எதுவாயினும் இருக்கட்டும். 
உன் அலகிலிருந்து தவறிய 
சிறு இரை கூட! 
காற்று வழிக் களம் சேர்ந்து மண்ணில் வித்தாகிறது. செடியாகிறது. மரமாகிறது. பூக்கிறது. காய்க்கிறது. 
கனி மரமாயின் கனி தருகிறது. 
பூ மரமாயின் வண்டுகளும்... தேனீக்களும் பசியாற இலையிடுகிறது. 
பறவைகள் வந்து இளைப்பாற கிளை தருகிறது!


உலகில் காடுகளைத் திறக்கும் சாவியே! 
மனம் தனைத் திற...
மனம் வாழ்வெனும் வனத்தில் பறக்கட்டும்.... 

 பறவை  நீ...
மனம் விரும்பும் பாடசாலையாகிறாய்! ...

பறத்தலிலும் துறத்தலிலும் உள்ளது வாழ்வு! 


நி
னைவில் சிறகுள்ள மனம்  ஒரு பறவையே! 
  பறக்க சிறகுகள் வேண்டாம். மனம் போதும். 

மனம் பறவையாகும்! 
சிறகு முளைக்க... 
அகம் அறுக்கும். 
முன், பின் எதிர்நோக்கில் கடந்து 
புறம் பறக்கும்... 
பழம் நினைவுகள் உண்ணும்...

மனம் எனும் பறவை பறக்கும். மனம் கொத்தும்.

சிநேகச் சிறகுடன்... 
மனம் கொத்தும் பறவை 








Irudhy. A 




6 comments:

JOHN A said...

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்... அருமை...

Irudhy.a said...

நினைவில் சிறகுள்ள மனம் பறக்கும். வாசிப்பிற்கு நன்றி...

Unknown said...

ஓய்வில்லாப் பறவைகள், நல்ல நினைவுகள்...

Jeeva said...

பறக்க சிறகுகள் வேண்டாம் .மனம் போதும். அருமையான வரிகள்.

Irudhy.a said...

தொடர்ந்த வாசிப்பிற்கு
மிக்க நன்றி.

Irudhy.a said...

மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்...

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...