Have your cup of tea...
'தடுக்கி விழுந்த இடமெல்லாம் பள்ளம்' - என்கிற பதம் அறிந்திருப்பீர்கள். கால்கள் தளர்ந்து நிற்கும் இடத்திலெல்லாம் எங்கேனும் ஓரு மூலையில் தேநீர் விடுதி ஒன்று திறந்திருக்கும்.
'கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்' அறிந்த வார்த்தைகள் இவை. தேநீர்க்கடை இல்லா தெருவே இருக்க வேண்டாம். இது தேநீர் விரும்பிகளின் விண்ணப்பம்...
மயில் மகிழ் மழையும்...
மனம் நெகிழ் தேநீரும்!
"மழை கண்ட மயில் அகவும்...
தேநீர் உண்ட மனம் புலரும்!
மழை கண்டு
மயில் தோகை விரிக்கும்!...
தேநீர் உண்டு
மனம் சொல் விரிக்கும்!...
மயிலாகும் மனம்...
மழை கண்ட தினம்!
கண் ரசிக்கும் மழையும்...
மழையுடன்
கைசேரும் தேநீரும்-இருப்பின்
இருக்குமிடமெல்லாம்
சுற்றுலாத் தலமே!
"தேநீர் குவளையே!
உன் கைவளை
என் கைவிரல்கள் கோர்க்கும்
ஒவ்வொரு பொழுதும்
எனக்கு மயில் மகிழ் மழைப் பொழுதுகளே!... "
ஒன்றுபட்டு உண்ணும் வாழ்வு. பகிர்தலிலும் உண்டு. பருகுதலிலும் உண்டு.
பருகவோ, உண்ணவோ? தேநீர் உண்டு.
வேர்களின் தாகம் தீர்க்கும் நதி போல தேநீரும் பலரது தாகம் தீர்க்கும் வற்றாத வாழ்நிதி. காரணம் தேநீர் பலருக்கு வாழ்வாதாரம்.
வேறுபட்ட தேசங்களிடையே காணும் ஒரே ஒற்றுமை. அதிகம் பருகும் பானம் தேநீர் என்பதே!
வேற்றுமையில் ஒற்றுமை.
சொல்லுதல் உண்மை
கவிதைகள் காகிதங்களில் அல்ல. வாழும் கணங்களில் உறைகிறது...
நான் பகிர்வதும் தேநீர் கணங்களே.
மற்றபடி எனக்கு கவிதைகள் எல்லாம் எழுதத் தெரியாது. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. சொல்லுவது உண்மை.
என்னிடம் அநேகக் கணங்களில் அநேகர் கேட்கும் கேள்வி...
ஒரு நாளைக்கு எத்தனை 'கப்' தேநீர் குடிப்பீர்கள்?
மன்னிக்கவும். கேள்வியில் பிழை என்பேன்.
சொற் குற்றமா? பொருள் குற்றமா? என்பது போல பார்ப்பார்கள். சிரித்தபடி பதில் தருவேன். நான் தேநீர் குடிப்பவனல்ல.
பின்னே! கேள்விப்பட்டது பொய்யா? பார்வையில் கேள்வி முளைக்கும்.
பொய்யில்லை. உண்மை. உங்கள் கேள்வியில் சிறு பிழை திருத்தம் மட்டும் செய்கிறேன் என்பேன்.
நான் தேநீர் குடிப்பதில்லை. தேநீரை உண்பேன்.
- என்பேன்.
சரி எத்தனை தேநீர் உண்பீர்கள்?
இமை துடித்தல் கணக்கு உண்டா?
கடற்கரை மணல் கணக்கு உண்டா?
வான் நட்சத்திரம் எண்ணும்
எண்ணம் உண்டா?
எனக்கு இல்லை. அப்புறம் ஒரு ரகசியம் உடைக்கிறேன்.
இக்கணம் வரை...
கணக்கு எனக்குப் பிணக்கு.
ஒரு நாளைக்கு எத்தனை தேநீர்?...
முடிக்கும் முன் பதில் தருவேன். எத்தனை வேண்டுமானாலும்....
உண்பேன்.
"'டீ சாப்பிடறீங்களா?
டீ சாப்ட்டு பேசுவோமா?
டீ கடை எங்க இருக்கு?
டீ' Break' விடுவாங்களா?
வண்டிய பத்து நிமிஷம் எப்ப நிறுத்துவீங்க? (பயணங்களில்)"
- இப்படி கேள்விகள் ஆயிரம் உண்டு.
உண்டு மகிழ தேநீர் இருந்தால் கேள்விகள் எதற்கு? பதில் இருக்கு.
'தேநீர் உண்ட மனம்
தேனீயாகும் தினம்!...
தேசமெங்கும் சுற்ற வேண்டும்...
தேநீரின் சுவை அறிய!
தேநீர் சிலருக்கு பழக்கம்...
பலருக்கு வழக்கம்.
எனக்கு...
தேநீரோடு தான் புழக்கம்!'
தேநீருக்கு ஏது இடைவேளை!
தொடர்வேன் அடுத்த வேளை...
இது எங்கள் தேநீர் தேசம்.
மனப்பறவை தன் அலகில் தேயிலை சுமந்தபடி சிறகு விரிக்கும். பறக்கும்...
மனம் பறவையாகும்...
மனம் கொத்தும்!
பறக்கும்...
Irudhy.a
8 comments:
Well done
Mass...Super...No words...
Well done.
Well done.
Superb Anna .Perfect...
Thanks lot for your comments...
என் உடம்புல ரத்தத்திற்கு பதிலா டீ தான் ஓடும்னு நெனைக்குற அளவுக்கு டீ குடிப்பேன்...
என்னைப் போல் ஒருவரா? We are sailing in the same boat. வாசித்தமைக்கு நன்றி. தொடர்ந்திருங்கள். மிக்க நன்றி...
Post a Comment