Lot of story begins with Tea. Tea makes better everything. Just think with tea...
Before think... Before ink... Just Do after drink tea..
தீர்ந்து போகாத பேச்சுக்கள் போல தேநீர்க் கதைகளும் தீர்ந்து போவதே இல்லை. தேநீர் பிறந்த கதை அறிந்திருப்பீர்கள். "சீன மன்னர் ஒருவர்"-/ நிற்கவும். "ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு" என்று நிறுத்தினால் மீதமுள்ள கதையை அவரவர் கற்பனைக்கு ஏற்ப எழுதிக்கொள்ளலாம். ஆனால் தேநீர் பிறந்த கதை ஒரு வானம் போல ஒரே மாதிரியாக காணக் கிடைக்கிறது.
"சீன மன்னர் ஒருவர்" என்று நிறுத்தியிருந்தேன். இக் கதையை நான் சொல்வதை விட நீங்கள் 'நாட்டாமை கூகுள்' அவர்களைத் தொடர்பு கொண்டால் பல தகவல்களை நொடிகளில் தருவார். படித்துக்கொள்ளுங்கள். துப்பறியும் கதை போன்று சுவாரஸ்யமாக நீளும். நம் கதைக்கு வருவோம். என் கதை என்று சொல்லாமல் நம் கதை எனச் சொல்வதற்கு காரணங்கள் உண்டு. என் கதைகள் போலவே உங்களுக்குள்ளும் தேநீர்க் கதைகள் நிறைய இருக்கலாம்.
பொதுவாக யார் நம் வீட்டிற்கு வந்தாலும் தேநீர் குடிக்க கொடுப்போம். இது மதுரை மண்ணின் கலாச்சாரம்.
' உட்காருங்கண்ணே. ஒரு வா 'டீ' குடிச்சிட்டு பேசுங்க' என்றதும் வந்தவர்,' தங்கச்சி இப்ப தான்' டீ' குடிச்சிட்டு வர்றேன். இப்பக்குள்ள 5 டீ குடிச்சிட்டேன். (டீ வேண்டாம்னு சொல்லிருப்பாரோ? '- னு நினைச்சா நீங்க கொஞ்சமா டீ குடிக்கிற ஆளு.)
காமெடியே இனிதான்...
' தங்கச்சி அரைக்கிளாசா கொண்டாமா. வேணாம்னா கோச்சுக்குவ. '- என்றதும் மதுரைக்கார த(எ)ங்கச்சி முழுக் கிளாசு தான் குடுப்பார். வந்தவர் சலித்துக்கொண்டு 'சொன்னாக் கேக்க மாட்ட நீ. போயி ஒரு டம்ளர எடுத்தாம்மா' என்று கறாராகச் சொல்லி வந்த டம்ளரில் ஒரே ஒரு மிடறு தேநீரைக் கவிழ்த்து அடுத்த மிடறு இறங்கும் முன் லாவகமாக எடுத்து உறிஞ்ச ஆரம்பிப்பார்.ஏற்கனவே கழுத்து வரைக்கும் இருக்கும் தேநீர். மனசு முழுக்க தேநீர் வியாபித்து இருந்தால் எப்படித் தேநீரை விட முடியும்.இது பொதுவான 'universal tea story'. இன்றும் எங்கேனும் வீடுகளில் இக்கதை நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். கதையல்ல. நிஜம்...(குறிப்பாக மதுரையும் மதுரை சார்ந்த ஊர்களிலும்)
- நண்பன் பெயர் இன்றும் ஞாபகம் இருக்கிறது. மறக்கமுடியாத பெயர். பரமசிவம். இப்பொழுது எங்கிருக்கிறான். எப்படி இருப்பான்? எதுவும் தெரியாது. ஆனால் அன்று அவன் வீட்டில் நான் சாப்பிட்ட(குடித்த) தேநீரின் சுவை இன்றும் என் நாவில் உள்ளங்கை ரேகை போல ஒட்டிக்கிடக்கிறது.
- பரமசிவம் வீடு
Irudhy. A
7 comments:
மதுரை மண் வாசம், அல்ல அல்ல டீ வாசம் தூக்குது
Christmas Carols போறப்ப, குடிக்கிற டீ தனிக்கத...அது பெருங்கத...
அந்தக் கதைகளுக்கு முன் இன்னும் நிறைய கதைகள் இருக்கு. கதைக்கலாம்.
உங்கள் எழுத்து டீ குடிக்காதவர்களையும் குடிக்க வைத்து விடும்
SP Tea parcel to you. Thanks for ur comments. Take care...
நிறைய நினைவுகளுக்குள் கொண்டு சென்று விட்டது
Thanks for your comment. Take care...
Post a Comment