Tea break accelerate mind and restarts everything after tea...
தேநீர் இடைவேளை என்பது அடுத்த செயலுக்கான தொடக்கம்.
'Tea Break' brakes frustrations...
Open books looks like a bird!
திறந்த புத்தகம் சிறகு விரித்த பறவையாகும்!...
Habit of reading mustbe a part of our life...
கடந்த பதிவு அளவில் சற்று நீண்டுவிட்டதோ? என்று தோன்றியது. அதனாலேயே தொடர்ந்து 'SNR' பயணத்தை தொடங்கிவிடாமல் கொஞ்சம் 'brake' போடலாம் என்று தோன்றியது. வண்டி 'வெத்தலப் பேட்டயில்' புறப்பட்டதோடு பதிவை நிறுத்தினேன். அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும். என் பதிவுகளைத் தொடர்ந்து கண்ணுற்று எனக்கு உற்சாகம் கொடுக்கும் உங்களை எந்த அளவிலும் சோர்வடைய வைத்துவிடக் கூடாது என்பதில் கவனத்தோடு இருக்கிறேன். இருப்பேன். என் பதிவைக் கண்ணுறும் பொழுது உங்களின் அற்புதமான நேரத்தை கொடுக்கிறீர்கள். நீங்கள் தரும் ஒவ்வொரு நொடிகளையும் விதைப்பவனின் விதைமணி போல மனக்கூட்டுக்குள் பத்திரப்படுத்துகிறேன்.
காட்சிப்பதிவுகள் நம்மை 'ஆக்டபஸ்' உயிரினம் போல தன் அநேகக் கரங்களால் வளைத்துக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் வாசிப்பு என்பது அரிதாகிவிட்டது. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்' - என்பது போல...
ஒவ்வொருவரும் ஒரு 'YouTube channel' வைத்திருக்கிறார்கள். ஏராளமாக 'பகிர்' என்ற வேண்டுகோளோடு குறும்பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன.வீட்டுக் 'காலிங்பெல்' அழுத்துவதுபோல நானும் பார்த்துவிட்டு மணிப்பொத்தானை அழுத்திவிடுவேன். யாரையும் புண்படுத்தும் எண்ணம் நிச்சயமாக எனக்கு இல்லை. நிதர்சனம் இது. நீங்களும் இந்த அனுபவத்தைக் கடந்திருக்கலாம். 'கெட்டதிலும் நல்லது'-என்பது போல ஆறுதலாக நல்ல பதிவுகளைத் தருகிற
ந(ண்)பர்களும் இருக்கிறார்கள். மறுக்கமுடியாது. நானும் விரைவில் 'காலிங்பெல்' மாட்டலாம் என்றிருக்கிறேன். மணிப்பொத்தானை மறவாமல் அழுத்தி விடுங்கள். நானும் உங்களில் ஒருவன் தானே...
சரி எழுத்துக்களத்திற்கு வந்து விடுகிறேன்.
முட்களுக்கு மத்தியில் இருந்தாலும் ரோஜாவை ரசிப்பது போல ரசனையோடுதான் எதனையும் அணுகவேண்டியிருக்கிறது. அதனால் எழுத்துக்கள் மிகுந்துவிடாமல் எழுத எத்தனிக்கிறேன்.
' மணிரத்னம் படம் மாதிரி சுருக்குனு எழுதுப்பா'-என்று யாரேனும் சொல்லிவிட்டால் குழந்தைபோல தரையில் கைகாலை அசைத்து அழவேண்டியதாகிவிடும். அப்படி என்னை நான் நினைத்துப் பார்ப்பேன். 'செம காமெடியாக' இருக்கும். 'இவ்வளவும் பேசிப்புட்டு
இந்தப் பதிவ இப்புடி நீட்டுனா எப்புடி. சரியில்லையே'- என்று யாரேனும் எண்ணலாம். தவறில்லை.
எழுத்துலகின் விடியல் அழகானது. இதை நீங்கள் அறிவீர்கள். அதனாலேயே என்னைப் போன்ற கற்றுக்குட்டியின் 'குட்டி ஸ்டோரிகளையும்' வாசித்து உற்சாகம் அளிக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் மதிக்கிறேன். இந்தப்பதிவின் முடிவாக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். அப்பொழுது தான் என் அடுத்தபதிவிற்கு நல்ல தொடக்கத்தைக் கொடுக்கும்.
ஓடும் அல்லது நிற்கும் ஒரு படப்பதிவு அதைக் கண்ணுறும் நம் மனதிற்குள் எந்தக் கற்பனைகளையும் ஓடவிடாது. உதாரணமாக ராஜா கதை எடுப்பவர் ராஜாவை ஒப்பனையோடு அங்க அசைவுகளோடு படம் பிடித்து நம் கண்முன் காண்பித்துவிடுகிறார். இதில் என் கற்பனைக்கு இடமில்லை. ஆனால் 'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு' என்ற எழுத்துக்களை வாசிக்கும் போது என் மனதில் ஒரு ராஜா உடைவாளோடு குதிரையில் இருப்பார். இன்னொருவர் மனதில் அந்த ராஜா சிம்மாசனத்தில் அழகுப்பதுமைகள் மயில்தோகை விசிற அமர்க்களமாக அமர்ந்திருப்பார். இப்படி ஒவ்வொருவர் மனதிலும் ஒரு ராஜா உருவாகி பட்டையைக் கிளப்புவார். அதுதான் எழுத்துக்களின் வலிமை. வாசிப்புலகின் உன்னதம்.எழுத்துக்களை வாசிக்கலாம். எழுத்துலகில் வசிக்கலாம். புத்துணர்ச்சி பெற எழுத்துலகில் சுத்தமான (ஆக்ஸிஜன்) உயிர்க்காற்று உண்டு. என் எழுத்துக்களையே விரும்புகிற நீங்கள் எழுத்துலக ஜாம்பவான்களின் எழுத்துக்களை வாசித்துப் பாருங்கள்.எல்லைகளற்ற கற்பனை வெளிகளில் மனப்பறவை சிறகு விரிக்கும். உங்களில் நிறைய பேருக்கு வாசிப்புப் பழக்கம் இருக்கலாம். வாழ்த்துக்கள்...
குறிப்பு
விருந்து இலையில் வைக்கும் ஊறுகாய் போல என் எழுத்துக்களுக்கு தேவையான இடங்களில் புகைப்படங்களை பயன்படுத்துகிறேன்.முடிந்த வரை நானே கிறுக்குகிறேன். சிறகின் அழகே அதன் சிரத்தை தானே! அதனால் சிரம் எடுக்கிறேன். மற்றபடி உங்கள் கற்பனைக்கு சிறகாக என் எழுத்துக்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.
அடுத்து விரைவில் மிக்கேல் பட்டணம் பறக்கலாம்.
மனம் பறவையாகும்!
பறக்கும்...
irudhy.a
6 comments:
எண்ணங்களின் வண்ணகோலங்கள்
வார்த்தைகளில்...
அருமை...
Thanks cheta...
எழுத்துக்களோடு விளையாடி கவிஞனாகவும், வண்ணங்களோடு விளையாடும் ஓவியனாகவும் இருக்கின்றீர்கள். அருமை.,...
I am waiting for hearing your SNR bus experience.
தங்களின் விமர்சனத்திற்கு நன்றி. 'பாத்ரூம்' பாடகன் மாதிரி தான் நான். நன்கு உண்ட காளை இளைப்பாறி அசைபோடுவது போல நான் மனம் குறித்து அசைபோடுகிறேன். (Rewind) வசைபாடாமல் என் எழுத்துக்களுக்கு இசைந்து உற்சாகப்படுத்துகிறீர்கள். மற்றபடி நான் கவிஞன் அல்ல. நல்ல ரசிகன். அவ்வளவே. இணைந்திருங்கள். நன்றி.
Your attitude is really super sir. You want to share your experience along with your present thoughts. Super. Nowadays mind is longing to hear someone speak through mind instead many speak only "coming to the point" & silence. Happy to read.
சமயங்களில் சன்னல் அருகில் சலனமற்று நின்று கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஒரு புறா வந்து சன்னல் அருகே அமர்ந்து 'க்ருக் க்ருக்' என்று இசை பாடும். மனம் மகிழும்.
தங்களின் விமர்சனத்தையும் நான் அவ்விதம் எண்ணி மகிழ்கிறேன். பறவையின் விலாசம் அறியவில்லை. சரி என் கூட்டிற்கு வந்து போனால் போதும். நன்றி. இணைந்திருங்கள்...
Post a Comment