"Life is short. Be Happy"...
என்ற வரிகளைக் காலம் 'கொரோனா' உளி கொண்டு உலகத்தின் கல்வெட்டுக்களில் பொறித்துக்கொண்டே இருக்கிறது.
'Life is very short நண்பா! Always Be happy..
- என்ற பாடல் வரிகள் கொரோனாவுக்கு முன் எழுதப்பட்டது. கொரோனா காலத்தில் 'popular' ஆனது. வரிகளுக்குச் சொந்தக்காரர் திரு. அருண்ராஜா காமராஜ் அவர்கள். இவரோடு பேசும் வாய்ப்பு அமைந்தது. இயல்பானவர். அச்சமயம் 'கனா' திரைப்படத்தினை இயக்கியிருந்தார்.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எளிமையாகவே இருந்தார். இவரைப்போலவே
இவரின் பாடல் வரிகளும் எளிமையாக மனசுக்குள் மேடையிட்டு அமர்ந்துகொள்ளும்.
'மாஸ்டர்' படப்பாடல் எழுந்த சூழலைப் பற்றி இவர் தனது நேர்காணலில் பகிர்ந்தது நினைவில் இருக்கிறது.
'ஒரு விபத்து. எனக்கு எதுவும் ஆகல. கார் கொஞ்சம் டேமேஜ் ஆயிடுச்சு. கார ' toe 'பண்ணி recovery van-ல கோர்த்துவிட்டாங்க. அந்த நேரத்தில் தான் இந்தப்பாடல் எழுதும் வாய்ப்பு வந்துச்சு. மறுநாள்
' lyric 'வேணும்னு சொன்னாங்க. அப்ப இருந்த சூழல்ல முடியுமான்னு மனசு கேட்டுச்சு. இருந்தாலும் நல்ல வாய்ப்ப விட முடியாம சரின்னு சொல்லிட்டேன். அந்த நேரம் விபத்துல இருந்து தப்பிச்ச மனசு
"life is very short நண்பா" - னு வரிகள எழுதுச்சு"-
என்று பாடல் உருவான விதத்தை பகிர்ந்திருந்தார். பாடல் வரிகளைப் போலவே அடுத்து உலகின் போக்கு அமையும் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
" சத்தமில்லாமல் யுத்தம் ஒன்று வருகுது! "என்று ஆண்டவன் உலகிற்குச் சொல்லியிருக்கலாம். ஆனால் சத்தம் நிறைந்த உலகம் சத்தமற்ற யுத்தத்தின் எச்சரிக்கை ஒலியைக் கேட்கவில்லை.
தற்சமயம் இப்பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களில் சிலருக்கு இப்ப எதுக்கு இந்த விஷயம் ஓடுது? என்ற கேள்வி எழலாம். கேள்வியில் நியாயம் உண்டு. காரணம் 'மனம் கொத்தும் பறவையின்' பயணம் கடந்த காலத்தில் இருந்தது. பதிவுகளின் தொடர்ச்சிப்படி இப்பொழுது மிக்கேல் பட்டணப் பயணம் தொடர்ந்திருக்க வேண்டும். பயணத்தின் தொடர்ச்சியை நிறுத்தி இப்பதிவை தந்ததற்குக் காரணம் நம் எல்லோருடைய வாழ்க்கைப் பயணத்தையும் நிறுத்திப் பார்த்த 'கொரோனா' போர் குறித்துப் பதிவிட மனம் விரும்பியது. ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
செப்டம்பர் - 1
நீண்ட நாட்களுக்குப் பின் கல்லூரிகளும், பள்ளிகளும் திறக்க அரசு பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. எனினும் 'கொரோனா' இன்னும் சிகப்புக் கம்பளம் விரித்து நம்மை வீழ்த்த விரிந்த கரங்களோடு காத்து நிற்கிறது. நிற்காது பயணிக்க வேண்டிய சூழலில் நாடும், வீடும் சுழல நம் பயணங்கள் தொடங்கி நாட்கள் ஓடிக்கொண்டே
இருக்கிறது. அவ்வப்போது மூன்றாவது அலை குறித்த கேள்விகளும் மனசுக்குள் எழுந்த வண்ணம் உள்ளன. இச்சூழலில் தற்பொழுது நம்முடன் நம் பிள்ளைகளும்
சேர்ந்துகொண்டார்கள். தனியாகப் பயணிக்கும் பொழுதைவிட சேர்ந்து கூட்டமாகப் பயணிக்கையில் புற நெருக்கடி ஏற்படலாம். இருப்பினும் அகத்தை நெருக்கடி இல்லாமல் விசாலமாக வைத்துக்கொள்வோம்.
தற்போதைய சூழலில் நடக்கும் 'கொரோனா' யுத்தம் சத்தமின்றி விழிகளுக்கு அப்பாற்பட்டதாக நடந்து கொண்டிருக்கிறது. போரில் வாள் சுழற்றாமல் முகக்கவசங்கள் அணிந்தபடி யுத்தத்தை எதிர் கொள்வதே சாலச் சிறந்தது.
வாழ்க்கையின் முரண்
'முகமூடிகளை' (Mask)
குறிப்பிட்ட சில துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமே தங்களின் துறை சார்ந்த பணிகளின் போது அணிந்து பணி செய்தனர். ஆனால் காலம் எல்லாவற்றையும் மாற்றிப்போட்டது.
முகமூடிகள் முகக் கவசங்களாகின. முகக் கவசங்களின் விற்பனை பெருகியது. முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டது.
கங்காரு தன் குட்டியை வயிற்றுப்பையில் சுமந்து திரிவது போல நாம் முகக்கவசங்களையும், 'sanitizer'-களையும் சுமந்து கொண்டு திரிகிறோம்.
"WEAR MASK PROPERLY..." கைப்பேசியில் தொடர்ந்து வரும் குரல் எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. 'MASK' அணியாமல் வருபவர்களைப் பார்த்தால் 'Where Mask? Please Wear Mask' என்று மனம் எச்சரிக்கத் தூண்டுகிறது
'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதை அறிந்திருந்தும் நாம் (உலகம்) மாறாமல் தொடர்ந்து செய்த பல தவறுகள் இப்பொழுது 'பூமராங்' ஆயுதங்களாகி, விட்டெறிந்த நம் கைகளை நோக்கி வந்த வண்ணம் உள்ளன.
" பலவித problems will come & go. கொஞ்சம் chill panu mame"
பாடல் மனசுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
எத்தனை முறை தேய்த்துக் கழுவினாலும் அழிந்துபோகாத உள்ளங்கைகளின் ரேகைகள் போல செய்த தவறுகளும் அழியப் போவதில்லை. இதற்கு சாட்சியங்களாக தற்போது நிகழ்ந்துவரும் 'கொரோனா' காட்சிகள் போதும். உண்மைகள் உணரலாம்.
"life is very short நண்பா..." - பாடல் எழுந்தபோது 'கொரோனா' இல்லை. படம் வெளிவரத் தயாராக இருந்தபோது 'கொரோனா'
' life is very short நண்பா... " என்று தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. ஆட்டம் கண்ட தேசங்கள் கதவடைத்தன. (lockdown) இருப்பினும் கொரோனா உயிர்களைக் களை எடுத்த வண்ணம் இருந்தது. வாழ்வின் மீதான நம்பிக்கைகளை
' கொரோனா 'கை கழுவ வைத்தது. கண்ணுக்குள் இருந்தவர்களை கண்கள் காண முடியாதபடி ' கொரோனா 'கவர்ந்து போனது.
எழுத்துச் சித்தர் அமரர். திரு. பாலகுமாரன் அவர்களின்
'கற்றுக் கொண்டால் குற்றமில்லை'
வாசிக்க அருமையான புத்தகம். வாசித்துப் பாருங்கள்.
நல்லன அனைத்தும் கற்றுக்கொள்ளலாம் என்று எழுந்தால் சூழல்கள் சில்லரைகளைச் சிதறவிட்டு குனிந்து பொறுக்கச் சொல்லும். இனியும் குனிந்து பொறுக்கிக் கொண்டு தரை தவழ முடியாது. எழுந்து நல்லன கண்டு நட என்கிறது மனம்.
' கற்றுக்கொண்டால் குற்றமில்லை'. இது கற்றுக் கொள்ளும் காலம்.
'காற்றைப் பார்க்கிறவன் விதைக்கமாட்டான்' - என்கிறது வேதாகமம். கால நேரம் பார்க்காமல் நல்லவைகளை
விதைக்கும் காலம். விதைக்கலாம்.
'கொரோனா' நமக்கு நடத்தியுள்ள பாடம் நம்மிடம் கற்றுக்கொண்டது தான். இப்பொழுது நமக்கே தலைமை ஆசிரியராகி தலைமீது ஏறி தடியுடன் அமர்ந்திருக்கிறது. இப்போது அது நடத்துகிற பாடம் அத்தனையும் 'out of syllabus' என்பதுபோல பதில்கள் தெரியவில்லை.
அனைத்தையும் படைத்த ஆண்டவன் இருக்கிறாரே!
அவரிடம் கேட்டால் நிச்சயம் பதில்
கிடைக்கும் என்று தோன்றியது. ஆண்டவனும் வந்தார். ஆனால், கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் திரும்ப கேள்விகளைக் கேட்கிறார்! திருவிளையாடல் (சிவாஜி&நாகேஷ்) பட 'தருமி' போல மனம் கூப்பாடு போடுகிறது.
இனி...
தொடர்வது நிஜமல்ல. நிழல். ஆயினும் நிழலுக்குள் நிஜங்கள் ஒளிந்திருக்கிறது.
கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பம்
ஆண்டவனுக்கு அஞ்சு நிமிஷம்
ஆண்டவன் என்னிடம்
கேள்விகளுக்கு முன் கொஞ்சம் பேசலாமா? என்று கேட்டார். 'ஆனது ஆச்சு. ஒரு அஞ்சு நிமிஷம். பேசுங்க' என்றேன்.
Five minutes only
Time Starts Now...
ஆண்டவன்
அன்று......
நான் உலகைப் படைத்தபோது அனைத்திலும் நல்லவற்றையே கண்டேன். அனைத்தும் படைத்தபின் ஏழாம் நாள் ஓய்ந்திருந்தேன். ஏழாம் நாள் நீங்களும் ஓய்ந்திருக்கிறீர்கள். நன்று.
( No Choice. Answer all questions.)
இன்று
கேள்வி 1
உலகை என்றேனும் ஓய விட்டிருக்கிறீர்களா?
ஆண்டவன்
இன்று
கேள்வி 2
ஆசைகளும், எல்லை மீறல்களும் இல்லாமல் வாழ்கிறீர்களா?
Three minutes only...
ஆண்டவன்
அன்று...
ஆதிப்பெற்றோரிலிருந்து அவர்களின் வழி மரபுகள் பலுகிப்பெருக இறுதியில் ஒரு பெரும் ஜனத்திரளாகி பொய்களாலும், புரட்டுகளாலும் நல்லதென்று நான் கண்டு படைத்த அனைத்திலும் நஞ்சைக் கலந்தனர். நஞ்சு கலந்தது அறிந்திருந்தும் நெஞ்சு உரத்துடன் அலைந்தனர். பொறுத்திருந்து பொங்கி எழுந்தேன். பெரும் ஜலத்தால் உலகை அழித்தேன். இருப்பினும் நான் ஆண்டவன் ஆயிற்றே. அப்பொழுது என் பார்வையில் உத்தமனாக இருந்த நோவாவின் வழி மரபை மட்டும் பெரும் பேழைக்குள் அனுப்பி உயிர்பிழைக்க வைத்தேன்.
நோவாவின் பேழை
நோவா உத்தமனாக இருந்ததால் என் கோபம் குறித்து முடிந்தவரை மற்றவர்களுக்குச் சொல்லி மனம் மாறி தன் பேழைக்குள் பிரவேசிக்க அழைப்பு விடுத்தான். காதுகள் இருந்தும் கேளாதோர் ஆயினர். பெருவெள்ளத்துக்குள் அமிழ்ந்தனர்.
இன்று
கேள்வி 3
அன்றைய நோவாவைப் போல நன்மையானதை அறிய உங்களிடையே வாழும் நல்லவர்கள் செல்லும் சொல்லும் பாதைகளை அறிந்து மனம் திரும்பியிருக்கிறீர்களா? அல்லது நான் உலகில் காட்டும் சமிக்ஞைகளை (புயல், பெருமழை, பூகம்பம்) அறிந்து மனம் மாறியிருக்கிறீர்களா?
இன்னும் நிறைய கேள்விகள் உண்டு.
Times Up'
நீ கொடுத்த ஐந்து நிமிடங்கள் முடிந்துவிட்டது. நான் எல்லைகள் மீறுவதில்லை என்பதால் முடித்துக்கொள்கிறேன். ஒருநாள் அவகாசம் தருகிறேன். பதில் வேண்டும்.
"இன்று போய் நாளை வா"
- என்றபடி ஆண்டவன் மறைந்து போனார்.
ஒரு நாள் அவகாசம் இருக்கிறது. கேட்ட கேள்விகளுக்கு ஆண்டவனிடம் பதில் சொல்லி 'கொரோனா' எப்போது ஒழியும்? என்று தெரிந்துகொள்ளலாம்.
Oneday countdown starts...
மனம்கொத்தும் பறவை
பறக்கும்...
Irudhy. A
. |
12 comments:
அருமையான கேள்விகள்...
தரமான கருத்துக்கள்
கடவுள் நம்மோடு
Great Anna
பதில்கள் உங்களிடமும் இருக்கலாம். Time starts now. No choice. Answer all questions. Thanks for ur feedback cheta.
மிக்க நன்றி... Lord with all...
Thanks lot for ur feedback...
Great brother, i enjoy about your writings. Image presentation is nice
Thanks lot brother. I known your committments brother. But still you gave ur feedback. All ur blessings brother. Take care. Thanks for ur valuable comments...
அர்த்தமுள்ள சிந்திக்க வேண்டிய வார்ததைகள். அருமை......
Your drawing also very beautiful.
Thanks lot for ur feedback. Take care...
First of all beautiful drawing. God always gives us a chance to realize our mistake. Through messengers God warns us ,those who have faith are rescued by him. But even after warning those who did not realize their mistake ,he washed out. I think this is God's play in washing out evil spirit .each one should have faith& fear in God then only this situation will change.God will not destroy his creation without warning & giving chances. Super thought of you sir in this time.
Thanks lot for ur valuable feedback. உங்க கைகள்ல கொஞ்சம் தண்ணீர் எடுத்து சுவரில் தெளித்துப் பாருங்கள். அதில் அத்தனை ஒவியங்கள் புலப்படும். நான் எண்ணங்களைத் தெளிக்கிறேன். அவற்றை ஓவியங்களாகப் பார்த்து என் கிறுக்கல்களையும் ரசித்துப் பாராட்டுகிறார்கள். நீங்களும் பாராட்டியுள்ளீர்கள். உங்களது ரசிப்பிற்கும் நன்றி.
Post a Comment