நகரும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் மூன்று விதமான விளையாட்டுக்களை ஞாபகப்படுத்துகின்றன.
ஒன்று 'பரமபத விளையாட்டு'...
இறக்கம்...
காத்திருப்பு...
இம் மூன்றும் சேர்த்துச் செய்த கலவையாக கணங்கள் கடக்கும்.
இரண்டு...
'சதுரங்க விளையாட்டு' .
விரல்களின்
உத்தரவிற்கு
காத்திருக்கும்
'சிப்பாயாக' கணங்கள் கடக்கும்...
'ராஜா' தானோ என்ற சந்தேகம் எழும். 'பவர்ஃபுல் ராணி' நிறைய யோசிக்க வைக்கும். முயன்றால் 'சிப்பாய்' கூட ராஜாவாகலாம்' - என்று கட்டங்களின் வழி விழி திறக்கும்.
மூன்றாவது' சீட்டு விளையாட்டு.'
முதல் இரண்டும் கட்டங்கட்டி விளையாடிப் பார்க்கும்.
'இருக்கு. ஆனா! இல்ல' 'வரூ... ம்.? ஆனா வராது!' என்பது போல கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும்.
'Joker'-ஆக்கி வேடிக்கை காட்டும். கூட்டணி சேர்த்து' joker' - ஐ 'king maker' ஆக்கும்.
எது எப்படியோ வாழ்வின் மூவகை விளையாட்டுக்களிலும் சிக்கல்கள் விழும்போதெல்லாம் அவரவர் இஷ்டதெய்வங்கள் நடுவர்களாக நின்று சிக்கல்களை சிக்கெடுத்து சீர்வரிசைகள் செய்து மீண்டும் விளையாட்டைத் தொடர வைக்கிறார்கள். கடந்த பதினோரு மாதங்களில் வாழ்வின் இவ்வகை விளையாட்டுக்களை விளையாடிப் பார்த்திருப்போம் அல்லது வேடிக்கை பார்த்திருப்போம். இவை எல்லாவற்றையும் விட கடந்த இரண்டு ஆண்டுகளாக கால் அடியில் எந்த நொடியில் கண்ணிவெடி வெடிக்கும் என்று அறிய முடியா வழிப் பாதைகள் போல 'கொரோனா' கண்ணி வைத்து காணமுடியா காற்றாக அலைந்து திரிகிறது. நிறம் மாறும் பச்சோந்தி போல 'கொரோனா' தன்னை உருமாற்றிக் கொண்டே தன்னைத் தக்க வைத்து வருகிறது.இச்சூழல்கள் எல்லாம் சுழல்களாக மாறி நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.
' எல்லாம் கடக்கும்' எனும் நிதர்சனம் மனம் சுழல் வாழ்வைக் கடக்க தோணியாகிறது. இதோ தோணிப் பயணத்தில் இது 'டிசம்பர் மாதம்'...
சிறுவயதில் ஒரு மண் உண்டியலில் கிடைக்கும் காசுகளை சேமித்து அவ்வப்போது உண்டியலில் இட்டு அது நிறையும்பொழுது உடைத்து சேர்ந்த மொத்தச்சில்லரைகளை எண்ணுகிற போது மனசுக்குள் ஒரு பல்பு எரியும். மனம் பிரகாசமாகும். அதுபோல மனக்கூட்டை உடைத்துப் பார்க்கும் மாதமாக 'டிசம்பர்' பிறப்பெடுக்கும்.
வீட்டுத் தாழ்வாரங்களில் வண்ணங்களில் விரிந்து
காகித நட்சத்திரங்கள் முளைக்கும்!
பகற்பொழுது...
பனித்துகளாகக் கரையும்.
சட்டென இரவு கவிழும்.
காற்றோடு கைகோர்த்து வரும் கடுங்குளிர் 'நான் தான் வந்துட்டேன்ல' - என்றபடி
நம் உதடுகள் தட்டும்.
பற்கள் தந்தி அடிக்கும்.
வாசமில்லாப் பூக்கள்
வண்ண முகம் காட்டும்.
மாலை...
அதிகாலை வேளைகளில்...
"காதோரம் தான்... நான் பாடுவேன்" - என்றுபாடி பரவசம் கூட்டும்.
Have your cup of "Tea"...
மொத்தத்தில் 'டிசம்பர்' மாதம் கூடை நிறைய பரிசுப்
ஒவ்வொரு பூவிற்கும் ஒரு மணமும், வண்ணமும் இருப்பது போல ஒவ்வொரு மாதத்திற்கும் சில பிரத்யேகப் பலன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பலன்களுக்குள் நான் நுழையப்போவதில்லை. எல்லாப் பலன்களும் எல்லா மாதங்களிலும் நிறைந்திருக்க வேண்டுமென்பதையே மனம் விரும்பும்.
'பெட்ரோமாக்ஸ்' லைட்டே தான் வேணுமா? 'திரு. கவுண்டமணி அவர்களின் வசனம் காதுக்குள் கேட்கிறது.
' ஜீலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனது... '
' செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வில் இன்பத்தை தொலைத்துவிட்டோம்'
- போன்ற பாடல்களைப் போல டிசம்பரில் தொடங்கும் பாடல்கள் ஏதேனும் இருக்கிறதா? தெரியவில்லை. ஆனால், உலகளவில் மாதங்களின் பெயரில் வெளிவந்த திரைப்படங்களில் ஆஸ்கர் விருது பெற்ற ஒரே படம்
' டிசம்பர் 7'.
ஜான் போர்டு என்பவரால் 1943-ஆம் ஆண்டு
"பேர்ல் ஹார்பர்" பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான்
'டிசம்பர் 7' இப்படத்திற்கு ஆஸ்கர் கிடைத்ததில் ஆச்சரியமில்லை. ஆச்சரியங்களை, எதிர்பாரா நிகழ்வுகளை நிகழ்த்திப் பார்ப்பதில் 'டிசம்பர்' எப்பொழுதும் முதல் நம்பர்.
'டிசம்பர்' - Bio-Data...
'டிசம்பர்' கிரெகொரியின் நாட்காட்டியில் பனிரெண்டாவது மாதம். முன்பு ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாக கணக்கிடப்பட்டுள்ளது. பின்னர் ரோமானியர்கள் சனவரி, பிப்ரவரியை காலண்டரில் இணைக்க 'டிசம்பர்'' 12வது மாதமானது. 'மார்ச்' மாதமே வருடத் துவக்க மாதமாக இருந்திருக்கிறது. தமிழ் மாத வழங்கல்களிலும் 'சித்திரை' முதலா? 'தை' முதலா? என்கிற குழப்பம் இன்றும் நீடிக்கிறது. முன்னதாக 'டிசம்பருக்கு' 29 நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 'ஜூலியஸ் சீசர்' நாட்டாமையாகி 29- ஐ 31 நாட்களாக்கி தீர்ப்புச் சொல்லவே காலண்டரில் 'டிசம்பர்' 31 நாட்களானதாக வலைப்பூவில் அறிந்தேன். எது எப்படியோ 'டெசம்' என்ற 'லத்தீன்' வார்த்தையிலிருந்து தான் 'டிசம்பர்' பிறந்தது. 'தசம்' - என்றால் 'பத்து' என்ற பொருள் தமிழில் உண்டு. அப்படியென்றால் 'டிசம்பர்' மாதம் பத்தா? பனிரெண்டா? கேள்விகள் முளைக்கிறது.
'ஏன்யா... நல்லாத் தான போய்கிட்டு இருக்கு. டிசம்பர் குளிருக்கு இந்த மாதிரி பத்தவைக்கிறதும் குளிர்காய சுகமாத்தானயா இருக்கு! சரி, பதிவ சீக்கிரமா முடிச்சுவிடுய்யா. முடிவா என்ன சொல்ல வர்றீக. சொல்லி முடிங்க. இன்னும் ஒரு நிமிசம் மிச்சமிருக்கு' ' ஐயா திரு. சாலமன் பாப்பையா அவர்களின் குரல் ஒலிக்கிறது.
ஐயா, 'ஆனது ஆச்சு இன்னும் அஞ்சு நிமிசம். முடிச்சுடுவேன்'. மனம் வேண்டுகோள் வைக்கிறது. உங்களிடமும் தான்.
' Extension please' என்று 'திரிசூலம்' படத்தில் நடிகர் திலகம் திரு. சிவாஜி அவர்கள் கத்துவாரே. அப்படியே நானும்.
'Extension please... '
'இதப் பாருப்பா பதிவ இதுக்கு மேல ஓட்டுனா படிக்கிறவுக பாப்கார்ன் சாப்புடப் போயிருவாக. இப்ப நிற்கிறதே எல்லைக்கோட்டுல தான். இனிமே உனக்கு இல்லை கோடு. இப்ப கோட்ட தொட்டுட்டு அவுட் ஆகாம உன் எல்லைக்குள்ள போயிருப்பா. ஒரு நிமிசத்துல ஏதாவது சொல்றதுனா சொல்லிட்டு மனப்பறவைய திறந்து விடு. பறக்கட்டும். பொறவு வரட்டும். என்ன நாஞ்சொல்றது சரி தானே'. இது உங்கள் குரலாகவும் இருக்கலாம்.
மிச்சமுள்ள... ஒரு நிமிடம்
அடுத்து ஊர் பதிவு இட்டவுடன் தொட்டுத் தொடர்ந்து' கூடை நிறை டிசம்பர் பூக்களுடனும் 'ஒரு குட்டிக்கதையுடனும் வருகிறேன். தொடர்ந்திருங்கள். பிடித்திருந்தால் பகிருங்கள்.
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்...
6 comments:
டிசம்பர்னாலே கொண்டாட்டம் தான்...
வாசிப்பிற்கு நன்றி...
டிசம்பர் என்றாலே குதூகலம்தான்...உங்கள் வரிகளால் மாதத்துவக்கமே அமர்க்களம் தான்..
மிக்க நன்றி...
Luckier & coolest last month of the year December. I always like december poo which will be in yellow ,violet. Nowadays no one keeps December poo. Nice description of December. Also my yummy plum cake which I will eat during Christmas. In school longing for Santa claus gifts.
Thanks lot for your feedback and sharing ur memories.
Post a Comment