About Me

Sunday, January 9, 2022

வலைப் பூவில் தினம் ஒரு பூ...

Fly...

 மனம் கொத்தும் பறவை... 

     நம்பிக்கைப் பூக்கள் தொடுத்து புதுவருடத் தேரை வடம் பிடித்து இழுக்கத் தொடங்கிய சூழலில் மீண்டும் 'கொரோனா'ச் சுழல் மூன்றாவது அலையாகி அலையடிக்க ஆரம்பித்துவிட்டது.
 வலைவீசிக் காத்திருக்கிறது. 

 கண்ணுக்கரண்டியில் அள்ளிய தண்ணீர் கண்களின் வழியே அள்ளிய வேகத்திலேயே தன்னை விடுவித்து மீண்டும் தண்ணீரோடு சேரும். கண்ணுக்கரண்டியில் சிக்காத தண்ணீராக.... 'கொரோனா' வீசும் வலைகளில் சிக்காத மீன்களாகி! நம்மை பெருந்தொற்றிலிருந்து தற்காப்போம். 

அலையோடு போக செத்த மீன்களல்ல நாம். எதிர்நீச்சலிடும் உயிருள்ள மீன்கள் என்பதை நினைவில் கொள்வோம். 

கண்கள் அறியா சத்தமில்லா யுத்தத்தில் வாள் சுழற்றி வீரம் காட்டவா முடியும். கேடகமாக முகக் கவசம் கைக் கொள்வதே கொரோனாவை கைகழுவும் சாதுர்யமாகும்.
முகக் கவசம் அணிவோம். முகக் கவசம் அணியாதவர்களைக் கண்டால்

"Where mask? Wear Mask" 
 - என அன்புடன் அறிவுறுத்துவோம்.

Have your cup of  "tea" ... 


சத்தமில்லா யுத்தக் களத்தில் நிற்கும் சூழலில் சத்தமில்லாமல் பூக்கும் பூக்கள் பற்றிய யோசனைகள் மனசுக்குள் அரும்பியது. எது வரினும் என்ன நிகழ்ந்தாலும்  பூக்கள் தன் மொட்டுக்களை அவிழ்க்கத் தவறுவதே இல்லை. எங்கெங்கும் சூழலுக்கேற்ற பூக்கள் பூத்தபடியே தன் வாழ்வைக் கடக்கின்றன.

 'பூக்களிடம் பாடம் படிக்க 
புத்தகப் பை தேவையில்லை. புன்னகை போதும்' . 

புன்னகையோடு அணிசேரும் பூக்களும் புன்னகை பூத்து குலுங்கிச் சிரிக்கும். மனசுக்குள் வாசம் சேர்க்கும். 


பூக்களின் வாழ்வு அறிய விரும்பினேன். பூக்களை அரியாது அதன்  மொழி அறிந்து பூக்களின் சுற்றத்தோடு சிநேகம் கொண்டு பூக்களைப் பறித்து வாசம் நுகராது தள்ளி நகர்ந்து ரசித்தபடி ரசித்த பூக்களின் அழகை அதன் வாழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வலைப் பூவில்.... 
தினம் ஒரு பதிவு இடவேண்டும் என மையல் கொண்டேன். மனம் தான் ஆமை வேகத்தில் நகர்ந்தது. 
தினம் என்ன பகிரலாம்? என யோசிக்கையில் மனசுக்குள் ஊர்ந்த ஆமை... 

"தம்பி. நீ ராக்கோழி. தினம் உன்னால ஒரு பதிவ மத்தவுக ராத்தூக்கம் தூங்கப் போகுறதுக்குள்ள பகிர முடியுமா? கொஞ்சம் யோசி. எழுதும் முன் உன் மனதை யாசி" 
      - என்றபடி அறிவுறுத்தி நகர்ந்தது அந்த ஆமை. ஆமை எப்பொழுதும் என்  மனசுக்குள் ஒரு சவாலைக் கொடுத்துவிட்டு  
"தம்பி உன் சாமர்த்தியம். சவாலே...சமாளி என உசுப்பேற்றும்.
   "உசுப்பேறி உசுப்பேறி ரணகளமான... உடம்புக்காரனாக்கும் யான். விடுவேனா?".... 
உசுப்பேற்றிய 'முயலாமையுடன்' முரண்பட்டு சவாலை சந்திக்க முடிவு செய்தேன்.

 இதோ புதிய தொடரின் 
       ' திரை விலகல்'...
பதிவை அன்பர்களின் ராத்தூக்கத்திற்கு முன் பகிர்ந்து விட்டேன்.
பூக்களோடு தினம் உங்களைச் சந்திக்க முடிவும் செய்தாகிவிட்டது. தொடரின் தலைப்பு பற்றிய யோசனை தினம் தலை தூக்கியது. நான் யோசிப்பது ஒன்றாக இருக்கும். முடிவில் ... நெருங்கி வருகையில் 'மனப்பறவை'  கைக்குள் வேறொன்றைத் தரும். 'அதுவும் நன்றே' என எண்ணத் தோன்றும். பட்டியலிட்டுத் தொடங்க வாழ்வு  நிகழ்ச்சி நிரல் அல்லவே. நான் அப்படியே வாழப் பழகிக் கொண்டேன். கணங்களில் மனம் உறைந்திருக்கும். 

சரி முடிவாக தலைப்பு விஷயம் வருகிறேன். யோசித்து ஒரு வழியாக ஒர் வழி திறக்க யோசிக்காமல் ஒரு தலைப்பை


மனப்பறவை' வழக்கம் போல கைகளுக்குள் திணித்துப் பறந்தது.


வரும் 'தைப் பொங்கல்' முதல்... 
        பூக்கும்... 
      " தினப் பூ... 'நெனப்பு'!" 

                       
                        - மனம் கொத்தும் வலைப்பூவில் தினம் ஒரு பூவோடு சந்திக்கிறேன்...
      உங்களின் ராத்தூக்கத்திற்கு முன். 
              தொடர்ந்திருங்கள்...

அன்புடன் ஒரு வேண்டுகோள்... 

பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 

மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்... 


Irudhy.a 
 

10 comments:

JOHN A said...

மொழி நடை அருமை...முயற்சி தொடர மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...

Irudhy.a said...

Thanks cheta. தங்களைப் போல தொடர்ந்து வாசித்து வருபவர்களால் மெய்ப்படுகிறது. மேலும் புதிய தொடர்களைத் தொடர உத்வேகம் தருகிறது. நன்றி...

Maria said...

"தினப் பூ... 'நெனப்பு'!" அட்டகாசமான தலைப்பு. வாழ்த்துகள்..������ இராத்தூக்கத்திற்கு முன் தினம் ஒரு பூவின் மணம் எங்கள் மனங்களை வந்து சேரட்டும்... வாழ்க வளமுடன்..������

Irudhy.a said...

மிக்க நன்றி. வாசித்தமைக்கு நன்றி... வலைப் பூவில் பூக்கும் தினப்பூ. இருக்கட்டும் நெனப்பு...

Unknown said...

💐💐💐

Irudhy.a said...

Welcome... வாசித்தமைக்கு நன்றி. தொடர்ந்திருங்கள்...

G V SAMUEL said...

Upholding words brother especially living fishes will swim against the water great God bless

Irudhy.a said...

Thanks for your valuable comments and continuous reading brother. Take care...

vijidevi said...

Great start of commentary about colourful flowers with colourful words...

Irudhy.a said...

Welcome... Thanks for ur valuable comments.

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...