Fly...
Faith Never Fails...
Believe Be Live...
"ஒரு கதை சொல்லட்டா..."
- என்ற வசனம் 'விக்ரம் வேதா'
திரைப்படத்தில் இடம் பெற்று 'popular' ஆனது. காரணம் கதை கேட்டு கேட்டு வளர்ந்த சமூகம் நம் சமூகம். அப்புறம் எப்படி வசனம் 'popular' ஆகாமல் இருக்கும்.
இப்ப நான் 'ஒரு கதை சொல்லட்டா'
Have your cup of tea...
Kutty Story...
நான் சொல்லவிருக்கும் கதை பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
இது ஒரு நீதிக் கதை. 'Remake' திரைப்படங்கள் போல நீதிக் கருவை எடுத்து இக்கதைக்கு கொஞ்சம் திரைக்கதை சேர்த்துச் சொல்கிறேன். இக்கதைக்கும் தொடரும் பதிவிற்கும் சம்பந்தம் உண்டு.
Open பண்ணா....
ஒரு அழகான கிராமம்.
பாலாறும் தேனாறும் ஓடிய கிராமம் என்று வருணிக்க முடியாவிட்டாலும்
பஞ்சம், பட்டினியே பார்க்காத ஊர் என்று சொல்லலாம்.
ஒரு 'Generation' விடைபெற்று அடுத்த 'Generation' தலையெடுத்த காலம். கிராமம் கொஞ்சம் அலங்கோலமானது. பொய்களும் புரட்டுகளும் கிராமத்தில் குடியேற ஊரில் முன்பு இருந்த செழிப்பும் வளமும் கொஞ்சம் கொஞ்சமாக ஊரைக் காலி செய்து வெளியேறின.
கிராமம்...
அன்று!... இன்று?
பொதுவாகவே, வீட்டில் கொஞ்சம் கோபம் இருந்தால் அதை உணவின் வழியே வெளிக்காட்டுவோம். ஆண்கள் உணவை மறுதலிப்பார்கள். Conditions apply. (உணவகத்திற்கு சென்று...? 'Company secrets' சொல்லக்கூடாது) பெண்கள் உணவில் சுவை குறைத்துக் காரம் கூட்டுவார்கள். (salt included)
அல்லது சமைக்கமாட்டார்கள். இது பொது நியதி.
குறிப்பு
'அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா பெண்கள குறை சொல்லிக்கிட்டு,
நாங்க கோபத்தை குப்பையில போட்றுவோம்' - என்று சொல்பவர்களுக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்கள். சரி விஷயத்துக்கு வருகிறேன். சீக்கிரம் கதை சொல்லிவிட்டு கடவுளைக் காணச் செல்லவேண்டும். கடவுளைக் காக்க வைக்கக் கூடாது. கடவுள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தயாராக இருக்கிறது.
குட்டிக்கதையில்,
கிராமத்தின் மீதான தன் கோபத்தை கடவுள் மழையை நிறுத்தி வெளிப்படுத்தினார். கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் கடவுள் இப்படித்தான் வெளிப்படுத்துவார். விண்ணை மூடுவார் அல்லது மொத்தமாக வானைத் திறப்பார்.
'சும்மாவா சொன்னாங்க...'
"கடவுள் திறந்தத யாராலும் அடைக்க முடியாது. கடவுள் அடைச்சத யாராலும்
திறக்க முடியாது".
உண்மை தான்.
கதையில் கடவுள் கிராமத்தில் பசுமையே இல்லாதபடிக்கு வறட்சிக் கதவுகளைத் திறந்து வைக்க மக்கள் புலம்பித் தவித்தனர். அவரவர் இஷ்ட தெய்வங்களிடம் மழை வேண்டி மனுக்கொடுத்தனர். பூஜை பரிகாரங்கள் செய்தனர். பயன் இல்லை. கடவுள் 'lockdown' போட்டுக்கொண்டு தன்
வீட்டுக்குள்ளேயே இருந்தார்.
கிராமத் தலைவர் ஊர் நிலை குறித்து விவாதிக்க கிராமக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
தலைவர் சிறுமியிடம் 'மழையப் பார்த்து மாசம் பல ஆச்சு. குடைய வெயிலுக்குக் கூட விரிக்கிறதில்ல. பலர் வீட்ல குடை இருக்குமானு கூடத் தெரியல. பூஜை, பரிகாரம் பண்ணியும் வராத கடவுள் உன் கனவுல வந்தாராக்கும்! குசும்பு கடவுளுக்கா? உனக்கா?. இந்தப் பெரிய மனுஷியோட பெத்தவுக கூட்டத்துல இருந்தா கூட்டிகிட்டு வீட்டுக்குப் போங்க. '-என்று சொல்லி இடிஇடியெனச் சிரித்து முடிக்கும் முன் சிறுமி கூட்டத்தைக் கடந்து வெகு தூரம் சென்று மறைந்தாள்.
அப்போது வானத்தில் கருமேகங்கள் திரண்டன. மரத்தின் அடியில் அமர்ந்திருந்த கிராமத்து தலைவர் வான் பார்த்து வாய் பிளக்க விண்ணிலிருந்து வந்த மழைத்துளி வாய் பிளந்த தலைவரின் நாக்கில் சொட்டு வைத்தது. மேகங்கள் தரையிறங்கி பெரு மழையாகி ஊருக்குள் எட்டு வைக்க சிறுமி குடை விரித்தாள்.
கதை சொல்லும் நீதிகள்
1. கடவுள் கருணைமிக்கவர்.
2. குற்றங்களை மன்னித்து தயை புரிவதில் கடவுள் தாராளன்.
3. நம்பினவர்களைக் கடவுள் ஒருபோதும்
கை நெகிழுவதில்லை.
கடவுள் எல்லாம் கடந்தவர். சொன்னநேரம் கடப்பதற்குள் செல்ல வேண்டும்.
இனி வருவது...
நிஜமல்ல. நிழல். இருப்பினும் நிழலுக்குள் நிஜங்கள் ஒளிந்திருக்கின்றன.
கடவுள் நம்மோடு!
கடவுள் தயாராகவே அமர்ந்திருந்தார். விடைகள் தயார் என்றேன்.
ஆண்டவன் அமைதியாகச் சிரித்தார்.
'நீங்கள் கேட்ட கேள்விகளின் வரிசைப்படிதான் பதில்கள் சொல்ல வேண்டுமா? எனக்கு வரிசைகள் ஞாபகத்தில் இல்லை. ஆனால் எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு' என்றேன்.
கடவுள் கடுகளவுகூட கோபம் கொள்ளாமல் "எனக்கு
உன்னிடத்திலிருந்து எந்த பதில்களும் வேண்டாம். எல்லாம் நான் அறிவேன். அனைவரும் அறியவே கேள்விகள் கேட்டேன். கேள்விகளுக்குப் பதில்களை அறிய முயன்றிருப்பீர்கள். பதில்களைத் தேடிக் களைத்திருப்பீர்கள். அறிந்தும் அறியாதவர்களாகவே இருக்கிறீர்கள். நீங்கள் தற்பொழுது பார்த்துவரும் 'கொரோனா' காட்சிகளில் எல்லா பதில்களும் படங்களாக ஓடிக்கொண்டிருக்கின்றன. எதை விதைத்தீர்களோ அதையே அறுக்கிறீர்கள்.
'கொரோனா' காட்சிகளும் & சாட்சிகளும்
காட்சி 1
1. மரங்களை அழித்தோம். விளைவு
மருத்துவ மனைகளில் உயிர்க்காற்றுக்காக (ஆக்ஸிஜன்)
அல்லாடினோம்.
காட்சி 2
மண்ணுக்குள் மழைநீர் புகமுடியாதபடி 'மட்காத கழிவுகளை (பாலிதீன் பிளாஸ்டிக் பை போன்றவைகள்)
மண்ணுக்குள் விதைத்தோம்.
விளைவு---
விதைத்தவைகளை அறுவடை செய்து உடல் முழுக்க (கொரோனா கவச உடைகள்) சுற்றித் திரிகிறோம்.
காட்சி 3
எங்கெங்கும் கறை படிந்த கைகள்.
விளைவு
கைகளைத் (sanitizers) திரவங்கள் கொண்டு கழுவிக் கொண்டே இருக்கிறோம்.
காட்சி 4
நல்லன காண இரண்டு கண்கள். நல்லன கேட்க இரு காதுகள். குறைத்துப் பேச ஒரு வாய். ஆனால் நடப்பது வேறு. நல்லன பார்ப்பதில்லை. நல்லன கேட்பதில்லை. அதிகமான பேச்சுக்கள் என்றே நகர்ந்த வாழ்வு. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
விளைவு-----
கண்களை மட்டும் திறந்துகொண்டு காதடைத்து வாய் மூடித் திரிகிறோம்.
காட்சி 5
மீறுதல்களற்ற வாழ்வைக் கடந்தது அரிது. ஆசைகள் தான் அனைத்துக்கும் அடிப்படை. அடிப்படை வசதிகள் தாண்டி வீட்டிற்குள் ஆடம்பரங்களைக் குவித்தோம்.
விளைவு
வீட்டிற்குள்ளேயே முடங்கிக் குவிந்தோம்.
ஓய்வில்லாத உலகம் ஓய்வெடுத்துக் கொண்டது.
'கொரோனாவைக்' கடிந்து பயனில்லை. கற்றுக் கொண்டால் குற்றமில்லை...
கடவுள் மறுமுறை சிரித்தார். 'போய் வா' என்றார்.
' கொரோனா' எப்போது? என்று என் மனக் கேள்வியைக் கேட்குமுன்
"Life Is Beautiful. Be Happy..."
"எல்லாம் கடந்து போகும்...."
கடப்பவைகள் நல் வழிகளில் இருக்கட்டும்.
- என்றபடி ஆண்டவன் மறைந்தார்.
எல்லாம் கடக்கலாம். சிறகு விரித்துப் பறக்கலாம்.
மனம்கொத்தும் பறவை பறக்கும்...
Irudhy. A