நீளும் வானமும்... இரு சிறகும்...
காற்றின் மொழி பறவைகள் அறியும்...
வானில் வழி கண்கள்
அறியும்...
திசைகளற்ற தேடலில்
பறவைகளின் சிறகு விரியும்...
மேகக் கூட்டங்களில்
தன்னைத் தொலைக்கும்!
வெயில் குளிக்கும்...
மழை ரசிக்கும்...
இறகு உதிர்க்கும்...
காற்றுவெளி பறந்து
உதிர்க்கும் இறகால்
தன் வாழ்வு எழுதும்...
பறத்தலே பறவையின் வாழ்வு!
வேதாகமம்
அதிகாரம் - 12
திரு வசனங்கள்- 24/25
24.வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை. அறுப்பதும் இல்லை. தானியக் களஞ்சியங்களில் உணவைச் சேமித்து வைப்பதுமில்லை. ஆனால் தேவன் அவற்றைப் பாதுகாக்கிறார். நீங்களோ பறவைகளைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள்.
கவலைப்படுவதால் உங்களில் ஒருவனும் உங்கள் வாழ்வின் அளவை நீடிக்க வைக்க முடியாது.
25. சிறிய காரியங்களை உங்களால் செய்ய முடியாவிட்டால் பெரிய காரியங்களைக் குறித்துக் கவலைப்படுவானேன்?
மனம் ஒரு பறவையாகும். பறக்கும்... பழம் நினைவுகள் உண்ணும்!
Irudhy. A