'Fly' என் எண்ணங்களுக்கான களம். எழுதுவது எனக்கு தேநீீர் பருகுவது போல பிடித்தமான ஒன்று. 'என்ன எழுதுவது?' என்ற எந்த திட்டமிடலும் எனக்கு இல்லை. இலக்கின்றிப் பறக்கும் ஒரு பறவையைப் போல என் எழுத்துக்களும் இலக்கின்றி தன் சிறகு விரிக்கும். என் பதிவுகளைக் கண்ணுறும் அனைவரும் என்னைவிட புத்திசாலிகள் என்பதை நான் அறிவேன். உங்களின் சாளரம் வழியே பறந்து செல்லும் சிறு பறவை நான். உங்களைக் கடக்கும் பறவையை எப்படி ரசிப்பீர்களோ! அப்படியே என் கிறுக்கல்களையும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரசிக்கவில்லையெனில் கழுவிக்கழுவி ஊற்றுங்கள். கழுவுகிற பாத்திரம் தானே தூய்மை பெறும். நானும் தூய்மையாவேன். உறைபனியிலும் வெண்மையாவது சிறந்ததே... பறத்தலில் நான் கண்டது. கேட்டது. அறிந்தது. பிடித்தது. படித்தது இவை அனைத்தும் இடம் பெறும். எனக்கு தேநீர் மிகவும் பிடிக்கும். இதில் என்ன சுயநலம். மன்னிக்கவும். தேநீர் அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் சூடான தேநீரோடு பயணத்தை துவங்குகிறேன்.