About Me

Showing posts with label பூக்களை அறி(யும்)முகம்.... Show all posts
Showing posts with label பூக்களை அறி(யும்)முகம்.... Show all posts

Thursday, January 20, 2022

பூக்களின் பாடசாலை...


Fly...

 
            மனம் கொத்தும் பறவை 

"பூக்களின் பாடசாலை"


சேர்க்கை ஆரம்பம்...

சிபாரிசுகள் தேவையில்லை.
இடைத்தரகர்கள் யாருமில்லை! 
அரும்பும் பூக்கள் அறிய
விரும்பு பூக்களின் வண்ணம்போல... 
அமைதலான எண்ணங்கள்-
 இருந்தால் போதும். 

Have your cup of" tea"


பூக்களை அறியும் 'பாடசாலையில்' 
புத்தகப் பொதிகளுக்கு 
வாய்ப்பே (அனுமதி) இல்லை. 
பூக்களின் மொழி அறிய 
புதிய வழி
 கல்விக் கொள்கைகள்... ஏதுமில்லை! 

பூக்களோடு சிநேகம் கொள்ள 
சிறப்புத் தீர்மானங்கள் ஏதும் முன்னெடுக்கத் தேவையில்லை! 

பூக்களோடு கைகோர்க்கலாம். 
பூவின் மொழி அறியலாம். 
பூ முகம் காணலாம். 


முகம் பூவாய் பூக்கலாம்! 
மலரினும் மெல்லிய
 மனம் வாய்க்கலாம்! 

பூக்களின் பாடசாலையில்... 
   தினப் பாடமே 
     'மனப்' பாடமாகும்! 
         'மனனம்' ஏதுமின்றி 
          மலர்களின் வாசம் நுகரலாம்... 
              பூவின் கரம் பிடிக்கலாம். 
           பூச்சக்கரமாக சுற்றி வரலாம்!
 

முடிவில் துவக்கமாக... 
     பூக்களுக்கு எதற்கு  முகவுரை?
   'பூவுலகு' தானே பூக்களின்                                    முதல் உ(ரை)றை. 
முகம் முகமாய்... 
பூக்களுடன் மனம் கோர்த்து 
        பூப்பாதைகளுக்குள்... 
        உலாப் போகலாம்!




வண்ணமும் வாசனையும் பூக்களின் மொழி! 
பூக்களின் 'கலை' அறிய...
'பூக்களை' அறிய......

இனி ஒவ்வொரு வெள்ளியும் பூக்கும் 
           - "உலாப் பூக்கள்" ... 


தொடர்ந்திருத்தலுக்கு 
    'நன்றிப் பூக்கள்' ... 
தொடர்ந்து வாசித்து வர 
    'வரவேற் பூக்கள்' ... 


 உலாப் பூக்களில் நாளை முதற் பூ? 
        "நெனப்பு..." 



நட்பு(பூ) உடன் வேண்டுகோள். 

  பூக்களின் 'பாடசாலை '         பிடித்திருந்தால் பகிருங்கள்... 

மனப் பறவை மனம் கொத்தும்! பறக்கும்... 


இருதய். ஆ

 



அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...