About Me

Showing posts with label மனம்கொத்தும் பறவை... ( பழம் நினைவுகள் உண்ணும்). Show all posts
Showing posts with label மனம்கொத்தும் பறவை... ( பழம் நினைவுகள் உண்ணும்). Show all posts

Wednesday, August 11, 2021

'SNR' வேர் வழிப் பயணம் 2


Fly...


'SNR' - In   ( படிகளில் நிற்காதீர்)

            'கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள்'.

             கண்கள் பேருந்தின் சன்னல் மேல் எழுதியிருந்த எழுத்துக்கள் மேல் நிற்க ' போலாம். ரெய்ட்' - என்ற நடத்துனரின் குரலுக்குக் கட்டுப்பட்ட 'SNR' கண்களை உருட்டிக் கொண்டு ஒரு வழியாக 'மிக்கேல் பட்டணம்' வழிகள் நோக்கிப் புறப்பட்டது.


              S-sensible 
                   N- Nativity
                       R- Remember 
          என் சிறுபிராய 'SNR' பேருந்துப் பயணங்கள் இன்றும் என் நினைவில் கல் விழுந்த குளம் போல ஏதேதோ நினைவுகளோடு மனசுக்குள் வட்டமிட்டபடி வளையவருகின்றன. 
காரணம் 'SNR' - மனிதர்களை தன் சாளரங்களுக்குள் அடைத்துக்கொண்டு மனங்களைப் பால்வெளியில் பறக்க வைத்தது. அந்தப் பயணங்கள் எல்லாம்  ஒரு புஷ்பக விமானத்தில் பயணிப்பது போலத்தான் இருந்தன. விமானத்தில் பயணிக்கையில் மனம் கீழேயே வட்டமடிக்கும். 
'SNR'-ல் பயணிக்கையில் மனம் மேல்நோக்கிப் பறக்கும்.  
மிக்கேல்பட்டண மனங்களை சுமந்து பறக்கும் பறவைகளாக  எனக்குத் தெரிந்து  அன்று இரண்டு பேருந்துகள் மதுரையிலிருந்து பறந்தன. 
             ஒன்று 'SNR'. 
மற்றொன்று 'ராம கிருஷ்ணா'. 

         இரு இரும்புப் பறவைகளையும் மறக்கமுடியாது. அன்று, பறந்த தருணங்கள் தந்த நினைவுகள் இன்றும் நெஞ்சக்கூட்டுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கின்றன. 
எனக்கு 'SNR', 'ராம கிருஷ்ணா'... 
உங்களுக்கு?.... 



    இதம் தந்த நெருக்கமான இரும்புப் பறவைகள் உங்களின் மனக் கூட்டுக்குள்ளும் சிறைப்பட்டுக் கிடக்கலாம். பேருந்து! இரயில்! விமானம்! எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இப்பதிவைக் கடந்து முடித்ததும் நீங்களும் மனக்கூட்டைத் திறக்கலாம். நினைவுப் பறவைகள் பறக்கலாம். பழம் நினைவுகள் உண்ணலாம். 
          பண்டிகை நாள் தரும் மகிழ்ச்சியை விட அந்த நாளுக்காக நாம் தயாராகிற தருணங்கள் தான் எப்பொழுதும் நம் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். மறக்கமுடியாத அனுபவங்களைக் கொடுக்கும். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் மிக்கேல் பட்டணப் பயணமும் அப்படித்தான்.எனக்குத் தெரிந்து அன்றைய சாலை வசதிகளின் விதிப்படி  மிக்கேல்பட்டணப்
பயணத்திற்கு குறைந்தது 2மணி நேரமாவது ஆகும். (Conditions apply) அப்படி இருக்கையில் நானும், உங்களை அவ்வளவு சீக்கிரம் மிக்கேல் பட்டணத்தில் இறக்கி விட்டுவிடமாட்டேன். அதற்கு முன் பயணநேரத்தில் நிறைய பேசலாம். 
     "வாங்க. பழகலாம்" - என்று திரு. சாலமன் பாப்பையா சிவாஜி திரைப்படத்தில் சொல்லுவாரே அப்படித் தான் நானும் சொல்கிறேன். 
        'வாங்க... பறக்கலாம்...'- பழம் நினைவுகள் உண்ணலாம். 

முன்னோட்டம்


மிக்கேல்பட்டணம் இறங்கும் முன் ஊரைப் பற்றிய சில தகவல்களை சொல்கிறேன். 
 மிக்கேல்பட்டணம் ஒன்றும் ஊட்டியோ! கொடைக்கானலோ! அல்ல. 
வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடும் கிராமம். 
பெரும்பாலும் ஓட்டு வீடுகள் தான் அப்பொழுது இருந்தன. 
இன்று காசு கொடுத்து 'wifi' இணைப்பு வைக்கிறோம். அன்று காசில்லா 'wifi' இணைப்பு பெரும்பாலான வீடுகளில் இருந்தது. அது என்ன 'wifi'? என்பதை பின்னர் சொல்கிறேன். அநேக வீடுகளில் மரம் இருந்தது. முள்ளு முருங்கை தான். வீட்டிற்கு முன் பந்தலிட்டு சுரை, பூசணியெல்லாம் காய்த்துக் கிடக்கும். 
அதிதூதர் 'மிக்கேல்' தேவாலயம் ஊரின் நடுத் தெருவில் உண்டு. நினைத்தால் இன்றும் ஆலயமணிச்சத்தம் என் காதுகளில் ஒலிக்கும். 
அப்புறம் ஒரு பாஸ்கா மேடை(இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக இங்கிருந்த மக்கள் இம் மேடையில் தான் நிகழ்த்தியிருக்கிறார்கள். நான் கண்டதில்லை. என் தாத்தா தான் மாதா வேஷம் கட்டுவாராம். அவர் ஓர் ஆசிரியர்.நன்றாகப் பாட்டுக் கட்டுவார்)
 எனக்கு மிகவும் பிடித்த 'சந்தியா மாடம்'. அப்பொழுது தண்ணீர் கட்டிக்கிடந்த அழகான குளம். இங்கு கதைக்க நிறைய உண்டு. பிறகு, 
ஊருக்கு வெளியே உயிர்நீத்தாரின்
 கல்லறைத்தோட்டம் இருக்கும். 
 கருவேல மரங்கள். பனைமரங்கள்,கரும்புக் காடுகள் நிறைய உண்டு. 
தாமரை பூத்துக்கிடக்கும் ஓர் ஊரணி. 
வெயில் ஏறி விளையாடும் அழகான தெருக்கள். இன்னும் நிறைய உண்டு. ஊர் சுற்றலாம். 
            பயணம் என்றாலே மிக்கேல் பட்டணத்து வம்சாவழிகள் இன்றும் கட்டுச்சோறாக எலுமிச்சை சாதம் கிளறிவிடுவார்கள். தொட்டுக்கொள்ள 'கொத்சு' தயாராகும். இப்பட்சணம் குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்காமலே ஒரு நாள் வரை கெடாமல் இருக்கும்.  தற்சமயம் நீங்கள் செய்து ஒரு நாளுக்குள் கெட்டுப் போனால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல. 


' கொத்சு' செய்முறை
              உருளைக்கிழங்கு. (தேவையான அளவு) தக்காளி நறுக்கியது(தேவையான அளவு). கம்மாக்கத்தரிக்காய்(இப்பொழுது கன்மாய்கள் இல்லை. அந்தக் கத்தரிக்காய்களும் இல்லை). ஏதோ கிடைத்த கத்தரிக்காய் என்று வாங்கிக்கொள்ளுங்கள். அப்புறம்
சிறிது சிறிதாக நறுக்கிய வெண்டைக்காய் (ஆங்கிலத்தில் 'ladies finger' என்பார்கள். எனக்குத் தெரிந்து என் அப்பா தான் அதை நறுக்கியிருக்கிறார். உங்கள் வீட்டில்? முடிவு சாதகமாக இருக்கட்டும்) பிறகு இயக்குனர் திரு. பாக்யராஜ் அவர்களின் 'favourite' முருங்கைக்காய். குட்டி குட்டியாக நறுக்கியது. அப்புறம் தேவைக்கேற்ப உப்பு, புளி, காரம் சேர்த்து வதக்கி தாளிக்க வேண்டியது தான். 'கொத்சு' ரெடி. 
செய்து சாப்பிட்டுச் சொல்லுங்கள். All Rights reserved by Michael patinam people. உங்களில் யாருக்கேனும் இந்தக் 'கொத்சு' முன்னமே தெரிந்திருந்தால் copy rights உரிமை உங்களுக்கும் உண்டு. 

 'SNR'- In (படிகளில் நிற்காதீர்)
      'யாருப்பா பஸ்சுக்குள்ள கொண்டு வந்து எலுமிச்ச மூட்டைய வச்சது. அதென்ன மூட்டைம்மா?' 
      'கண்டக்டர் தம்பி... 
அதுல கொஞ்சமா உருளைக்கிழங்கும்,பக்கத்துப் பையில வெண்டியும் இருக்கு. 
அவ்வளவு தான் என்னுது. சார்சு போட்றாதீக. மேல கெடக்குற கத்திரிக்கா மூட்டைக்கு மட்டும் காசக் குடுத்தற்றேன்' 
                'SNR' பல்வேறு திருப்பங்கள் கடந்து திருப்புவனம் வந்து ஆசுவாசமானது. 
ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்து ஒர் அருமையான கதையோடு பயணத்தை தொடரலாம். வரவிருக்கும் கதைக்கும் நம் பயணத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு.
சொல்லப் போகும் கதைக்குச்    சொந்தக்காரர் யார்? என்பது 'சஸ்பென்ஸ்'... 
 'SNR' பயணம் தொடரும்.... 
பயணங்களே நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. 
பயணிக்கலாம்.

 "அகச்சிறை அறுக்கலாம். புறம் சிறகு விரிக்கலாம்" ... 
பறக்கலாம். 
"மனம் ஒரு பறவை தானே! "*

                          
   irudhy. a

   
   

  


அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...