About Me

Showing posts with label மனம்கொத்தும் பறவை... (பழம் நினைவுகள் உண்ணும்). Show all posts
Showing posts with label மனம்கொத்தும் பறவை... (பழம் நினைவுகள் உண்ணும்). Show all posts

Wednesday, August 18, 2021

'SNR' வேர் வழிப் பயணம்-3

Fly...

   Life is a journey. Just travel  ... 

         காற்றால் நிறைந்திருக்கும் உலகைப் போல  நிறைய கதைகளும் உலகைச் சூழ்ந்து உறைந்தே கிடக்கின்றன. 


'தேடுகிறவன் கண்டடைவான்' -          






      'வேதாகமத்தின்' திரு
வசனம்  நினைவிற்கு வருகிறது. தேடலே பயணத்தின் இயக்க சாவி. பயணிக்கிறவனுக்கு  உலகம் பாதையாகிறது. படுத்து உறங்குபவனுக்கு உலகம் உறங்கும் பாய் ஆகிறது. பயணிக்கலாம். 
பயணங்களே கதைகளை விதைக்கிறது அல்லது பயணங்களே கதைகளாக முளைக்கிறது. 

       Have your Cup of Green tea

                     (  - - - 🍵- - - ) 

Journey Continues...
பயணங்கள் முடிவதில்லை... 

   'SNR' - In 
            (படிகளில் நிற்காதீர்கள்)


              புழுதியில் அமர்ந்து எழுந்தவுடன் சேவல் 'றெக்கைகள்' அசைத்து தன் உடலை  உலுக்கி தூசி தட்டுமே அது போல 'SNR' 'விர்ரூம்... ' என்ற சத்தத்துடன் தூசி கிளப்பி திருப்புவனத்திலிருந்து புறப்படத் தயாரானது. கொஞ்சம் கண் அயர்ந்திருந்த சிலர் சத்தம் கேட்டு கண்விழித்து வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தமாதிரி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டனர் . ஒருவர் 'ஸப்பாடி...' என்றபடி பெருமூச்சுவிட்டார். 

      'ஸப்பாடி' - பெருமூச்சுக்கான 'Flash Back'... 

       'வெத்தலப்பேட்ட' - யில் பெருமூச்சுவிட்டவரின் அருகில் முதலில் ஒரு சிறுவன் தான் அமர்ந்திருந்தான்.  போறாத காலம் நடத்துனர் சிறுவனை எழுப்பி ஒட்டுநர் பக்கம் இருந்த 'கியர் பானட்டின்' மேல் அமரவைத்துவிட்டு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்காத குறையாக ஒரு தடித்த வியாபாரியை பெருமூச்சுவிட்டவரின் அருகில் அமரவைக்க நம்மவர் 'ஸப்பாடி' மூச்சே விடமுடியாமல் அமர்ந்திருந்தார். தடித்த வியாபாரி இருக்கையை முழுக்க ஆக்கிரமித்திருந்தார். இரு கைகளும் இருக்கையை தாண்டி மரக்கிளை போல விரிந்திருந்தன. 
                 சமயங்களில் பேருந்துப் பயணங்களில் இது நிகழ்வதுண்டு. சென்னைக்கு வந்த புதிதில் நான் சென்னையில் இருந்து மதுரை வரை அப்படி சென்றிருக்கிறேன். ஒரே ஒர் ஆறுதல் 'வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும்' என்ற குரலை மூன்று முதல் நான்கு முறையாவது கேட்டுவிடலாம். தேநீர்  எனக்குத் தொடர்ந்து பிடிப்பதற்கும் விரும்பிக் குடிப்பதற்கும் இந்த மாதிரியான சம்பவங்கள் காரணமாயின. தடித்த நபரின் அருகில் அமர்ந்து பயணித்த அனுபவம் இருந்தால் இப்பொழுது அசைபோட்டுப் பாருங்கள்.அப்பொழுது  அசையமுடியாது பயணித்த அந்த அனுபவம் இப்பொழுது மனசுக்குள் 'மத்தாப்பூ' கொளுத்தும். பயணங்களின் சுவாரஸ்யமே இது தான். 

மன்னிக்கவும்.... 

திருப்புவனத்திலிருந்து சட்டென சென்னை வந்துவிட்டேன். 
மனம் கொத்தும் பறவை இப்படித்தான் சட்டென வேறெங்கேனும் பழம் நினைவுகள் உண்ணக் கிளம்பிவிடும். 

             -Cut to திருப்புவனம்... 

'SNR' - க்குள் புகுந்த காற்று நிறைய சூட்டோடு மாம்பழ வாசனையையும் நுங்கின் வாசனையையும் கொண்டு வந்து சேர்த்தது.  'மே' மாதம் என்றால் அது  'மா'  மாதம் தான். விதவிதமான மாம்பழங்களைச் சுவைக்கலாம். பத்தும்பத்தாதிற்கு நுங்கும் சேர்ந்துகொள்ளும். சென்னையிலும் நுங்கு சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் எங்கள் ஊர்களில் (தென் தமிழகத்து சிற்றூர்கள்) 
 உண்ட நுங்கின் சுவை இங்கில்லை. மாம்பழம் சொல்லவே வேண்டாம். கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் வயிற்றை வெள்ளாவி வைத்து வெளுத்துக் கட்டிவிடும். இப்பொழுதெல்லாம் மாம்பழம் சாப்பிடுவதில்லை. 

         திருப்புவனத்தை விட்டு 'SNR' புறப்பட்டது. திருப்புவனம் தந்த திருப்புமுனையில்... பெருமூச்சுவிட்ட 'ஸப்பாடி' ஆசுவாசமாக அமர்ந்து கொண்டார். பயணத்தின் இவ்வளவு நீட்டலுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. பின்னாளில் நான் வாசிக்க வாய்த்த ஒர் ஆகச்சிறந்த சிறுகதை என் பழைய பயண நினைவுகளை பறவையாக்கி பறக்க வைத்தது. இப்பொழுது அந்தக் கதை உலகிற்குள் பறக்கலாம். 

      'வாம்மா... மின்னல்!  அண்ணே  மாயி அண்ணே வந்திருக்காக! மற்றும் நம் உறவினர் எல்லாம் வந்திருக்காக. வாம்மா. மின்னல்!.. ' 
என்ற நகைச்சுவைக் காட்சியை பெரும்பாலும் எல்லோரும் பார்த்திருக்கலாம். அந்த மின்னல் போல் அல்லாமல் தென்றலாக வந்து மின்னலாக இடம்பெயர்ந்த 
ஒர் உன்னத உயிரின் பயணம் சார்ந்த கதை அது.

கதையின் தலைப்பு 

           ' மின்னல்'




எழுதியவர் கரிசல்காட்டுக் கதாநாயகன். எழுத்துக்களை நேசிப்பவர்களின் சுவாசக் கூட்டுக்குள் வெள்ளந்தி மனிதர்களின் கதைகளோடு ஒரு பறவையாகப்  பறந்து வந்தவர். அமரர் திரு. கி. ராஜநாராயணன் அவர்கள்.  

விருதுகளின் விழுதுகளில் ஊஞ்சல் ஆடியவர். வாசிப்பவர்களின் மனசுக்குள் ஊஞ்சல் கட்டியவர். 
இடைச்செவலில் பிறந்த எழுத்துச் சேவல். இந்தச் சேவல் கூவி விடிந்தன கரிசல்காட்டுக் கதைகள்.இவரது எழுத்துக்கள் எப்பொழுதும் மனத் திண்ணையில் அமர்ந்து கதை சொல்லியபடியே இருக்கும். 

 இனி 
கதைக்குள் பயணிக்கலாம்... 

     'வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும்.
அதுக்குள்ள விருப்பமுள்ளவங்க' 'மின்னல்' கதைய படிச்சிட்டு வாங்க. 
          Via 
        Google.
' கி. ராஜநாராயணனின் மின்னல்' என்று வலையிட்டுப் படியுங்கள். 

குறிப்பு
வலையிடுவது நீங்களே. வலைப்
 பதிவில் கதை படித்துவிட்டு எழுத்தாளுமையின் வலைக்குள் விழப் போவதும் நீங்களே! விழுந்து எழுங்கள்.... 
'முடியாதவங்க அப்படியே சூடா ஒரு தேநீர் குடிச்சிட்டு ரெடியா இருங்க. அந்தக் கதைய நானே அடுத்த பதிவுல சொல்றேன்'. 

' மின்னல்' - Trailor 

Cut 1

"உஸ்...  அப்பப்பப்பா" 
"என்ன புழுக்கம். என்ன வேக்காடு!" 
"இந்த பஸ் இப்போதைக்கு நகராது." 
"இந்தப் பிரயாணம் ஜன்மத்துக்கும் போதும்". 

Cut 2

  ' பேருந்தில் மொத்தம் நாற்பத்தைந்து பிரயாணிகள். நாற்பத்து இரண்டு ஆண்கள். மூன்று கிழவிகள்'... 

                கதையின் சுவாரஸ்யம் புரிந்திருக்கும். படித்துவிடுங்கள். 
மனங்களைப் படிக்கும் கதை தொடரும். 

மனம் கொத்தும் பறவை பறக்கும்... 




  



  Irudhy.a 






  





அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...