About Me

Monday, July 5, 2021

மனம் எனும் பறவை...


மேல் எழும்ப பறவைக்கு சிறகுகள் போதும்... 



நீளும் வானமும்... இரு சிறகும்... 

காற்றின் மொழி பறவைகள் அறியும்... 
வானில் வழி கண்கள் 
அறியும்... 
திசைகளற்ற தேடலில்
பறவைகளின் சிறகு விரியும்... 
மேகக் கூட்டங்களில்
தன்னைத் தொலைக்கும்!
வெயில் குளிக்கும்... 
மழை ரசிக்கும்... 
இறகு உதிர்க்கும்...
காற்றுவெளி பறந்து 
உதிர்க்கும் இறகால் 
தன் வாழ்வு எழுதும்... 

பறத்தலே பறவையின் வாழ்வு!

வேதாகமம்


புனித லூக்கா... 
அதிகாரம் - 12
திரு வசனங்கள்- 24/25

24.வானத்துப்  பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை. அறுப்பதும் இல்லை. தானியக் களஞ்சியங்களில் உணவைச் சேமித்து வைப்பதுமில்லை. ஆனால் தேவன் அவற்றைப் பாதுகாக்கிறார். நீங்களோ பறவைகளைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள். 
 கவலைப்படுவதால் உங்களில் ஒருவனும் உங்கள் வாழ்வின் அளவை நீடிக்க வைக்க முடியாது.

25.  சிறிய காரியங்களை உங்களால் செய்ய முடியாவிட்டால் பெரிய காரியங்களைக் குறித்துக் கவலைப்படுவானேன்?  

மனம் ஒரு பறவையாகும். பறக்கும்... பழம் நினைவுகள் உண்ணும்!


Irudhy. A





                          

Friday, July 2, 2021

பறவையின் இலக்கு...


Fly

 பறத்தலே பறவையின் இலக்கு... 


பறத்தல் ஒர் அனுபவம்... 

பறவைக்கு சிறகு. 

மனிதனுக்கு மனம்... 

பறவை பறத்தலின் வழி எல்லாம் கற்றுக்கொள்கிறது. கற்றுக்கொண்டதன் வழி பறக்கிறது. 

நாளைய குறித்த  கவலை

பறவைகளுக்கு இல்லை. 

வானமே கூரை. 

பறத்தலின் வழி இரை. 

பறவையைக் கண்ட மனிதன் விமானம் படைத்தான். கற்றுக்கொள்ள பறவைகளிடம் நிறைய உண்டு. 

மனித மனம் பறவையாகலாம்! பயணங்கள் மனதின்

                                   சிறகாகலாம்.. . 

பறக்கலாம். எல்லாம் கடக்கலாம்... 

 

மனம்கொத்தும்... 
நினைவுகள் சிறகு கொடுக்கும்! 
மனம் பறவையாகிப் பறக்கும்... 

பறக்கலாம்.... 
Irudhy. a



அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...