Saturday, October 9, 2021
அது ஒரு வெயிற்காலம்...
Saturday, October 2, 2021
முதுமை...
Sunday, September 26, 2021
வேர்கள் நோக்கும் காலம்...
"அதிர்ந்திடும் இளமைப் போதில்ஆவன அறங்கள் செய்துமுதிர்ந்திடும் பருவந்தன்னில்மக்கட்கு முடியைச் சூட்டிஎதிர்ந்திடும் துன்பமேதும்இல்லாமல் மக்கள், பேரர்வதிந்திடல் கண்டு நெஞ்சுமகிழ்வதே வாழ்வின் வீடு"
- புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தரின் பாடல் வரிகள் முதுமை வாழ்வின் உன்னதங்களை உலகிற்குச் சொல்கிறது.
வாழ்வின் தேடல்களின் வழி பயணப்பட்டு கிட்டிய வரை கண்டுணர்ந்து இறுதியில் எல்லோரும் ஏறி அமர்ந்துகொள்ளும் பேருந்து முதுமை. சிறுபிராயங்களில் நான் என் அண்ணனுடனும், தம்பியுடனும் எங்கள் வீட்டு முதுமை காண மிக்கேல் பட்டணம் செல்வது வழக்கம். மே மாதம் முதல்வாரத்தில் எங்கள் பயணம் அமையும். துவக்கத்தில் அம்மா எங்களுடன் வருவார். பிறகு 'வெத்தலப் பேட்ட' யில் 'SNR' - ல் அமரவைத்து நடத்துனரிடம் சொல்லிவிட்டு குச்சிமிட்டாய், குருவி ரொட்டியெல்லாம் வாங்கிக் கொடுத்து 'டாட்டா' காட்டிச் சென்று விடுவார். நடத்துனர் பேருந்தில் எங்களைக் கடந்து நீந்துகையில் ஒரு பார்வை பார்த்துக் கடப்பார். சில கடத்தல்களில் கொய்யாப்பழங்களையோ, வெள்ளரிக்காய்களையோ எங்கள் மடிகளில் தவழ விட்டுக் கடப்பார். 'அண்ணே! பிள்ளைகளைப் பத்திரமா ஊர்ல விட்றுங்க' - என்ற எங்கள் அம்மாவின் ஒற்றை வார்த்தைகளுக்குத் தான் அவரின் இத்தனை அலப்பறைகளும். 'அன்பு அளப்பறியது' - என்பதை உணர்ந்த தருணங்கள் அவை. நாங்கள் காக்கா கடி கடித்து பற்களால் மாவரைத்தபடி பயணிப்போம். நாங்கள் மட்டுமல்ல. இன்னும் சிலரும் அப்படித்தான் பயணிப்பார்கள்.
பத்துநாட்களுக்குள் அம்மாச்சி தடல்புடலாகத் தயாராகிவிடுவார். முள்ளு முருங்கையிடம், அவரைப்பந்தலிடம், நுங்கு வண்டிகளிடம் நாங்கள் வரவிருக்கும் தகவல் சொல்லுவார். மிக்கேல் பட்டணத்துத் தங்கம் 'சந்தியா மடம்' கண்மாய்க்கு காற்றைத் தூதனுப்பி தகவல் சொல்லுவார். அம்மாச்சியின் பழைய சீலை கிழிபட்டு மூன்று 'கௌபீனங்கள்' (கோவணங்கள்) தயாராகும். வீட்டின் தாழ்வார ஓட்டில் கசிந்து படரும் புகை, காற்றுவழிக் கலந்து அம்மாச்சி தயார் செய்யும் தின்பண்டங்களின் வாசனைகளை, எண்ணிக்கைகளை ஒளிவு மறைவில்லாமல் பக்கத்து வீடுகளுக்குக் கடத்தும்.
" என்ன சொர்ணாத்தா மெர்சி மக்க வர்றாகளா?"
விசாரிப்புகள் பலப்படும்.
'அதிதூதர் மிக்கேல் சம்மனசு' தேவாலய உபதேசியார் (ஆலயத்தில் ஊழியம் செய்பவர்) எங்கள் அம்மாச்சியிடம் 'படவாஸ். வர்றானுங்களா? வரட்டும். பூசை சமயத்துல பேசட்டும். இருக்கு அவனுங்களுக்குப் பூசை. போன தடவ வந்தப்ப செப மந்திரங்கள படிச்சிட்டு வரச் சொன்னேன். இந்த மொற பார்ப்போம்'- என்று முஷ்டிமடக்கி தயாராவார். (நாங்கள்லாம் அப்பவே அப்புடி ! இப்ப சொல்லவா வேணும்) எங்களைப் பொறுத்தவரை அச்சமயத்தில் உபதேசியார் எங்களுக்கு நம்பியாராகத் தான் தெரிவார். அவரின் முகம் இன்றும் புதிதாக வரைந்த ஓவியம் போல ஈர்ப்புடனும் வண்ணம் காயாமலும் மனசுக்குள் ஈரத்துடன் இருக்கிறது.
எங்களின் வயதொத்த சில குசும்பர்களும் அங்கு இருப்பார்கள். எங்கள் 'டிரவுசர்' சட்டைகளைக் கிண்டலடிப்பார்கள். டவுசர்ல போஸ்ட் பாக்ஸ் போட்றலாமா?' என்பார்கள். பட்டப் பெயர்கள் வைத்துக் கூப்பிடுவார்கள்.
நாங்கள் அம்மாச்சியிடம் புகார் மனு கொடுப்போம். அம்மாச்சி சிரித்தபடி 'கொசப்பயலுக இங்குன வரட்டும். முதுகுல டின்னு கட்டுறேன்' என்பார். குறைந்தது பத்து அல்லது பதினைந்து நாட்களாவது ஊரில் நாங்கள் 'டேரா' போடுவோம். டின்கள் கணக்கில் வைக்கப்படும். நாங்கள் ஊர் விட்டுக் கிளம்பும் நாளில் அம்மாச்சி அனைத்து டின்களையும் காந்திக் கணக்கில் எழுதிவிடுவார். டின்னுக்கு சொந்தக்கார குசும்புக்காரர்கள் நாங்கள் ஊரை விட்டுக் கிளம்பும் நாளில் கதாநாயகர்களாகி பாசத்துடன் வழி அனுப்பி வைப்பார்கள். 'மறுக்க வாங்கடா...'- என்பார்கள். 'பின்னே பாசம் இருக்காதா? என்ன!...' அவர்களுக்கு மே மாதப் பொழுது போக்கே நாங்கள் தான். எங்களுக்கும் நன்றாய்ப் பொழுது போகும்.
இதோ... நன்றாய்ப் பொழுதுகள் கடக்க மதுரை கடந்து மிக்கேல் பட்டணம் வந்து விட்டோம்.
அம்மாச்சியும் 'நான் ரெடி. நீங்க ரெடியா?' ... என்றபடி படிய வாரி ' Salt & pepper look'- ல் வந்து மிக்கேல் பட்டணப் பேருந்து நிறுத்தத்தில் எங்களுக்காகக் காத்திருப்பார்.
தற்சமயம் என் மனம் உங்களைச் சந்திக்க அடுத்த பதிவு வரை என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு சிறகடிக்கிறது.
மனம் பறவையாகும்...
மனம் கொத்தும்.
பழம் நினைவுகள் உண்ணும்!
பறக்கும்...
Irudhy. a
Saturday, September 18, 2021
'SNR' வேர் வழிப் பயணம்-6
Saturday, September 11, 2021
பாரதி யார்?...
"நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-அவை நேரே இன்றெனக்குத் தருவாய்..."
மீசைக்கவி பாரதி உரிமையோடு பராசக்தியிடம் கேட்கிறார்.
இன்றைய சூழலில்...
எந்தச் செயல் முன்நகர்வாயினும் அந்நகர்விற்கு இடைத்தரகர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் பாரதி பராசக்தியிடம் ' நேரே எனக்குத் தருவாய்' எனக் கேட்கிறார். நாமும் கேட்கலாம்.
தேவாலயத்திற்குச் செல்லும் போதெல்லாம் யாரேனும் ஒருவர் தனியாக அமர்ந்து தேவனிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆலயங்களிலோ, மசூதிகளிலோ இவ்விதக் காட்சிகளை நீங்களும் கண்டிருக்கலாம். பாரதி என்றுமே ஒரு முன்னோடி தான்.
"தனிமை கண்டதுண்டு. அதிலே சாரம் இருக்குதம்மா"
என்று பாடியவர் பாரதி. இன்றைய சூழலுக்கு இந்த வரிகள் பொருந்திப் போவதாகவே இருக்கிறது.
பாரதி என்றொரு மானுடன் மாநிலம் பயனுற எண்ணி வாழ்வையும் தன் ஒவ்வோர் எழுத்துக்களையும் தீப்பந்தம் கொண்டே எழுதினாரோ! என எண்ணத் தோன்றுகிறது.
பாரதியின் பேனா தாள் தொட்ட தருணங்களிலெல்லாம் தேசம் தலைநிமிர்ந்தது.
தலைகீழாய்க் கவிழ்த்தாலும் மேல் நோக்கியே எழும் தீயாக வாழ்ந்து மறைந்தவர்
மகா கவி "பாரதியார்!" ...
பொந்திடை வைத்த நெருப்பாக இன்றும் கணன்று கொண்டுதான் இருக்கிறது... பாரதீ!
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் முன்னமே
"ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று"-
என தீர்க்கதரிசனம் உரைத்தபடி
சுதந்திர வெளியில் பாடிப் பறந்தார் பாரதி.
இதோ, காலங்கள் கடந்தும்...
உமது முறுக்கிய மீசை போல நெஞ்சு முறுக்கி நாங்களும் உம்முடைய நூற்றாண்டு நினைவுகளில் மூழ்கி முத்துக்குளிக்க புறப்பட்டு விட்டோம்.
முத்தெடுக்கிறோமோ இல்லையோ! நிச்சயம் புதிய உயிராகி நல்லன தத்தெடுப்போம்.
மீண்டும் உமது வரிகளில் தொடர்கிறோம்..
"புதிய உயிராக்கி...என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய்"
என்று தொடர்ந்து பாரதி பராசக்தியிடம் கேட்டது நாம் அறிவோம்.
நம்மை கீழ்நோக்கித் தள்ளும் விசைகளைக் கடந்து மேல் எழும்பும் தீப் போல எழும்பிப் பிரகாசிக்கும் வரம் கேட்டு...
"கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து- என்றும்....
சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய்..."
என்ற பாரதியின் வரிகளில் முடிக்கலாம்.
விசையுறு பந்தைப் போலே மீளும் வரம் கேட்கலாம்.
பாரதி யார்?
மகா கவியின் நூற்றாண்டு விழா தொடங்கிய தருணத்தில்....
ராஜாவாக மீசை முறுக்கியபடி சிங்கமாக எழுந்து நிற்கும் முண்டாசுக் கவியின் நினைவுகள் ஒரு பக்கமிருக்க - - -
மறுபக்கமோ 'நாளைய பாரதம்' என்று நாம் எண்ணும் நம் பிள்ளைகளோ நம் பழஞ் சமூகத்தை அறியாமலே கடக்கிறார்கள். நாணயத்தின் இரு பக்கங்களாகச் சுழன்று கடக்கிறது வாழ்வு. பிழை அவர்களிடத்தில் இல்லை. நம்மிடத்தில் இருக்கிறதாகவே தோன்றுகிறது. நானும் பிழையைத் திருத்த விழைந்து என் மகனுக்கு இன்று பாரதியாரை அறிமுகம் செய்தேன். இன்னும் அறியச் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.
முன்பு ஒரு முறை தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைக் கண்டேன். நிகழ்ச்சியின் நடத்துனர் ஒரு புகைப்படத்தைக் காண்பித்து இவர் யார்? எனக் கேட்கிறார். அதற்கு வெவ்வேறு பதில்கள் வருகிறது. நான் பார்த்தபோது பாரதியாரின் புகைப்படம் இடம் பெற்றது. பலர் சரியாகச் சொன்னார்கள். ஆனால் அதில் இடம்பெற்ற சில பல சிறுவர்களும் சிறுமிகளும் சொன்ன பதில் சிரிப்பை வரவழைத்தாலும் அதிர்ச்சியாக இருந்தது.
பதில்கள்
1. டிவி-ல பார்த்திருக்கேன். 'Name' தெரியல.
2. திருவள்ளுவரா? (கேள்விக்கு கேள்வியே பதிலாக வந்தது)
3. படத்துல வருவாரா?
4. தலைல துண்டு கட்டியிருக்கதுனால அடையாளம் தெரியல...
இப்படி பதில்கள் நீண்டு கொண்டே போனது. இதை நான் பார்த்து முடித்து எப்படியும் ஐந்து ஆண்டுகளாவது கடந்திருக்கும்.
இப்பொழுது என் மகனிடம் மகா கவியின் படத்தைக் காண்பித்து 'இவர் யார்?' என்று கேட்கலாமா? என்று தோன்றியது. நான் கேட்க முயலவில்லை. எதற்கு விபரீதம். நேரடியாக பாரதியாரை அவனுக்கு அறிமுகம் செய்தேன். (இன்றேனும்)
ஒரு வேளை ஆர்வக்கோளாறில் இவர் யார்? எனக் கேட்டிருந்தால்???
'இவரா?... Nick junior - ல பத்துலு கூட வர்ற மோட்டு தான!' - என்று சொல்லியிருப்பான். மோட்டு கடா மீசையுடன் வலம் வருவார். அதனால் அப்படிச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. அல்லது அவன் பார்க்கும் கார்ட்டூன் கதாப் பாத்திரங்களை (பெயர்களைை) உருட்டிச் சரித்து தலையில் போடுவான். எதற்கு இந்த வினை. அதனால் நான் கேட்கவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வீட்டில் கேட்டுப் பாருங்கள். சரியான பதில் தந்தால் தலையில் முண்டாசு கட்டுங்கள்.
"ஜெய பேரிகை கொட்ட டா!" - என்று பாடிய பாரதி போல ஜெய பேரிகை கொட்டுங்கள்.
'கறுப்புக் கோட்டு' அணிந்து வெள்ளை மனம் கொண்டு நெற்றி சிவக்க செந்திலகம் இட்டவராக...
முறுக்கிய மீசை வளர்த்து ஆசைகளை வேரறுத்த பாரதி மீசையிலும் வெள்ளையனை நுழையவிடாது நரை கூடாமல் கிழப்பருவம் எய்தாமல் தனது 39-வது வயதில் இறை எய்தினார்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது கவிராஜன் கதையில்
'மீசை முளைத்த அளவிற்கு ஆசை முளைக்காத கவிஞன் பாரதி' என்கிறார்.
அப்பேற்பட்ட பாரதியின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலைச் சுற்றிய ஈக்களின் எண்ணிக்கையை விட மகா கவியின் இறுதியாத்திரையில் கலந்துகொண்ட மனிதர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததாக வருந்திப் பதிவிடுகிறார்.
கடுகளவிலும் அச்சம் இன்றி வெள்ளையனை துச்சமென எண்ணிய பாரதீ... காலனையும் விட்டதாகத் தெரியவில்லை.
" காலா என் காலருகே வாடா-சற்றே உனை மிதிக்கிறேன்" - என்று காலனை எச்சரித்தார் பாரதி. இன்றைய சூழலில் அனைவரும் கொரோனா அச்சமின்றி உச்சரிக்க வேண்டிய 'பஞ்ச் டயலாக்' இது.
உச்சரிப்போம். 'கொரோனா' வை எச்சரிப்போம்.
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே..."
- என்று உச்சிதொட இடியாக முழங்கிய பாரதியின் நூற்றாண்டில் அடி எடுக்கும் நாம் நம் சந்ததிகளின் மனதில் நம் பழம் பெருமைகளைப் பதியமிடுவோம்.
மரம் வளர்ந்து கிளை பரப்பினும் அதன் சுவாசம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் தன் வேர்களை நோக்கித் தானே இருக்கிறது. அது போல நாமும் நம் ஆணி வேர்களை அறிவோம். அறிவிப்போம்.
வேர்கள் பி(ப)டிப்போம். கிளை விடுவோம். பூவாகிக் கனி தந்து பறவைகள் வந்தடையும் கூடுகளாவோம்.
நம் மனமும் ஒரு பறவை தானே!
பறக்கலாம்.
மனம்கொத்தும் பறவை பறக்கும்...
பழம் நினைவுகள் உண்ணும்!
Have your cup of tea....
Sunday, September 5, 2021
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்...
Friday, September 3, 2021
குட்டிக் கதையும் நம்பிக்கை வாழ்வும்...
Fly...
அலாவுதீனும், அற்புத விளக்கும்...
மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...

-
மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...
-
' வானிலை அறிக்கை' பெரும்பாலும் அறிக்கைகளைப் பொய்யாக்கும். " சா... பூ... த்ரீ" போட்டு ' கிளியாங் கிளியா...
-
கேள்வியிலிருந்தே இந்தப் பதிவை தொடங்குகிறேன். உங்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் எது? பிடிக்காத இடம் எது? இயல்பாகவே எதிர்கொள்ளும் ...
-
' ஏப்ரல்' மாதம் சூட்டோடு சூடாகத் தனது ஓட்டத்தை ஓடி முடித்து இறுகப் பிடித்த சூட்டை தயார் நிலையில் இருக்கும் 'மே' ம...
-
நல்ல வெயிற் பொழுது. சாலைப்பூச்சின் தார் உருகி வாகனங்களின் சக்கரப் பற்களோடு ஒட்டிக் கொண்டு 'உன்னை விட்டேனா பார்' என்றபடி வட்டச்சுற...
-
Fly... மனம் கொத்தும் பறவை... "மங்கள இசை" உங்கள் செவிகளுக்குள்... சுற்றிச் சுழலும் பூமியும் புவனம் போற்றும் தாய்மை...
-
மனப்பறவையில் முதன்முறையாக எனது சிறுகதையைப் பகிர்கிறேன். வாசித்து முடித்து முடியுமானால் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். கட்டாயம் ஒன்றுமில்லை....
-
" திருநாட்களை விட திருநாளுக்காக காத்திருக்கிற, தயாராகிற தருணங்கள் தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கும். அப்படி " முக...
-
Tea filter depressions. Tea express wonderful things... 'Tea break'- starter of newthings... Have your cup of tea... ...
-
உருவிப் பறித்த மருதாணி இலைகளுக்குள் உறைந்து கிடக்கும் குளுமையும், விரல்களோடு கைப்பிடிக்கக் காத்திருக்கும் சிவப்பு வண்ணமும் போல சில நினைவுகள்...